Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 31, 2016

இந்தியாவில் கெட்டுபோன ரத்தம் ஏற்றப்பட்ட 2,234 பேருக்கு எய்ட்ஸ் நோய்


கடந்த 17 மாதங்களில் மட்டும் நாட்டில் கெட்டுப்போன ரத்தம் ஏற்றியவர்களில் 2,234 பேருக்கு எய்ட்ஸ் நோய் தாக்கி இருப்பது தெரியவந்துள்ளது.

அசாம் மாநிலம் கம்ரூப் மாவட்டத்தில் 3 வயது சிறுவன் தீக்காயத்துக்காக கவுகாத்தி மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான். அங்கு அவனுக்கு ரத்தம் செலுத்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து அவனுக்கு எய்ட்ஸ் நோய் அறிகுறி தென்பட்டது. அவனை பரிசோதித்தபோது அவனை ‘எச்.ஐ.வி.’ கிருமி தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது. கெட்டுப்போன ரத்தம் ஏற்றியதால் சிறுவனுக்கு எய்ட்ஸ் நோய் பாதித்து இருப்பது கண்டறியப்பட்டது.

நோய் பாதித்தவர்களுக்கும், விபத்தில் சிக்கி ஆபரேசன் செய்து கொள்பவர்கள் உள்ளிட்டோருக்கும் ஆஸ்பத்திரிகளில் ரத்தம் ஏற்றப்படுகிறது. அவை ஆஸ்பத்திரிகளில் மற்றும் ரத்த வங்கிகளில் இருப்பில் இருக்கும் ரத்தம் செலுத்தப்படுகிறது.

இதற்கிடையே நாடு முழுவதும் எய்ட்ஸ் நோய் பாதித்தவர்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது. அதில் கடந்த 17 மாதங்களில் மட்டும் நாட்டில் கெட்டுப்போன ரத்தம் ஏற்றியவர்களில் 2,234 பேருக்கு எய்ட்ஸ் நோய் தாக்கி இருப்பது தெரியவந்துள்ளது.

இவற்றில் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 361 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்தப்படியாக குஜராத்தில் 292 பேரும், மராட்டியத்தில் 276 பேரும், டெல்லியில் 264 பேரும் எய்ட்ஸ் என்னும் ‘எச்.ஐ.வி.’ கிருமியால் தாக்கப்பட்டுள்ளனர்.

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு இந்த புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது. நாட்டில் நிலவும் முக்கியமான அசாதாரண நிகழ்வுகளில் இதுவும் ஒன்று.

தேவையின்றி எய்ட்ஸ் நோய் உள்ளிட்ட கொடிய உயிர்க்கொல்லிநோய்கள் பரவுவதற்கு அரசின் மெத்தனபோக்கே காரணம் என சமூகநல ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எய்ட்ஸ் விழிப்புணர்வை ஊக்குவிக்க பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்குவதில்லை என்றும் புகார் தெரிவிக்கின்றனர். ஆஸ்பத்திரிகள் மற்றும் ரத்த வங்கிகளும் அஜாக்கிரதையாக செயல்படுகின்றன. அவர்களின் தவறுகளால் இக்கொடுமையான நோய்கள் பரவுகின்றன. ஆனால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்றும் சமூகநல ஆர்வலர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு நிறுவனத்தின் 2014-ம் ஆண்டு தகவல்படி 30 லட்சம் யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 84 சதவீதம் ரத்தம் தொண்டு நிறுவனங்களின் கொடை மூலம் பெறப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.