செக்ஸ் குறித்து சிக்சர் மன்னன் கிறிஸ் கெய்ல் பேசிய கருத்து பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பிக்பாஷ் டி20 தொடரின் மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணி அவருடன் உள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது.
டி20 கிரிக்கெட்டின் சிக்சர் மன்னனாக திகழ்ந்து வருபவர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிறிஸ் கெய்ல். உலக அளவில் நடைபெறும் டி20 தொழில்முறை கிரிக்கெட் தொடர்கள் அனைத்திலும் கெய்ல் விளையாடி வருகிறார். அவரது சிக்சர்களை பார்க்க ரசிகர்கள் மைதானத்தில் குவிகிறார்கள்.
இப்படி சிக்சருக்கு பெயர்போன கெய்ல், அடிக்கடி செக்ஸ் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் கூறி மாட்டுக்கொள்வதுண்டு. அப்படித்தான் சில மாதங்களுக்கு முன் ‘பிக்பாஷ் டி20’ தொடரில் விளையாடும்போது, பெண் தொலைக்காட்சி வர்ணனையாளரிடம் உன் கண்ணை முதன்முதலில் பார்க்கிறேன் என்றும், ‘டோன்ட் பிளஷ் பேபி (Don't Blush Baby)’ என்றும் பேசி மாட்டிக்கொண்டார்.
இந்த விவகாரம் அப்போது பெரிய பிரச்சினையை ஏற்படுத்தியது. ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர்கள் கெய்லுக்கு சர்வதேச அளவில் தடைவிதிக்க வேண்டும் என்று கூறினார்கள். ஆனால், கெய்ல் அபராதத்துடன் தப்பித்துக்கொண்டார்.
தற்போது ஐ.பி.எல். போட்டி நடைபெற்று வருகிறது. பெங்களூர் அணிக்காக விளையாடிவரும் அவரை இங்கிலாந்து பத்திரிகை நிருபர் ஒருவர் சந்தித்தார். அப்போது ‘‘என்னுடைய பேட் மிக மிக பெரியது. இதை நீங்கள் தூக்க வேண்டும் என்றால், இரண்டு கைகள் வேண்டும்’’ என்றார். அத்துடன் செக்ஸ் குறித்து பல்வேறு கருத்துக்களை கூறினார்.
இந்த பிரச்சினை உலக அளவில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. அத்துடன் கண்டனக்குரல் ஓங்கிக்கொண்டே வருகிறது. இருந்தாலும், அவர் விளையாடும் எந்த டி20 அணிகளும் அவரை அணியில் இருந்து நீக்கவில்லை.
முதன்முறையாக பிக்பாஷ் தொடரில் பங்கேற்கும் மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணி கெய்லின் ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ள இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அணியின் தலைமை நிர்வாக இயக்குனர் ஸ்டூவர்ட் காவென்ட்ரி கூறுகையில் ‘‘கெய்ல் உடனான சர்வதேச ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ள இருக்கிறொம். எங்களுடைய அணியில் அவர் இருக்கமாட்டார்’’ என்று கூறியுள்ளார்.
இதனால் பிக்பாஷ் தொடரில் கெய்ல் விளையாடமாட்டார் என்று தெரிகிறது. மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணிக்காக அதிவேகமாக அரைசம் அடித்து யுவராஜ் சிங் சாதனையை கெய்ல் சமன் செய்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே இங்கிலாந்து கவுண்டி அணியான சோமர்செட் கெய்லை சமீபத்தில் ஓப்பந்தம் செய்தது. தற்போது இந்த பிரச்சினையால் இங்கிலாந்து கவுண்டி தொடரில் கெய்ல் விளையாடுவது சந்தேகத்திற்குள்ளாகியுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.