ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட்டில் புதுப்புது தொழில்நுட்பத்தை புகுத்தி வருகிறது. தற்போது பந்து வீச்சாளர்களின் காயத்தை கட்டுப்படுத்த புதிய டெக்னாலஜியை அறிமுகப்படுத்த இருக்கிறது.
பவுலர்களின் காயத்தை கண்காணிக்க வருகிறது புதிய தொழில்நுட்பம்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான பீட்டர் சிடில், ஜேம்ஸ் பேட்டின்சன் ஆகியோர் காயத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் அவர்கள் இருவரும் இலங்கை அணிக்கெதிரான தொடரில் இடம்பெறவில்லை. காயம் காரணமான ஸ்டார்க் சுமார் 7 மாதங்கள் ஓய்வில் இருந்துள்ளார்.
முக்கியமான தொடர்கள் இருக்கும்போது அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் காயத்திற்கு உட்படும்போது, அது அணியை பெரிய அளவில் பாதிக்கிறது. இதனால், வீரர்களின் உடல் திறனை நன்கு அறிந்து கொள்வதற்காக ‘டோர்பிடோ டெக்னாலாஜி’ என்ற புதிய முறையை அறிமுகப்படுத்த இருப்பதாக மீடியாக்களில் செய்தி வெளியாகியுள்ளது.
அதனால் வர இருக்கும் இலங்கை தொடரில் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களை ‘டோர்பிடோ டெக்னாலாஜி’ பொருந்திய சிப்போடு காணலாம்.
வேகப்பந்து வீச்சாளர்கள் தங்கள் கையில் இந்த சிப்பை பொருத்தியிருந்தால், அவர்கள் தொடர்ச்சியாக பந்து வீசும்போது அவர்கள் வீசும் பந்துகள் எண்ணப்படும். அப்போது குறிப்பிட்ட பந்துகள் வீசிய பின் பந்து வீச்சாளர்கள் உடல்நிலை குறித்தும், அவர்கள் சோர்வாக இருக்கிறார்களா? இன்னும் எத்தனை பந்துகள் அவர் வீசலாம் என்பதை தெளிவாக வெளிப்படுத்தும். இதை வைத்து கேப்டன் அந்த பந்து வீச்சாளருக்கு ஓய்வு கொடுக்கவோ அல்லது கூடுதல் நேரம் பந்து வீச வைக்கவோ முடியும். சிறிய காயமாக இருந்தால் உடனடியாக அவரை நிறுத்திக்கொள்ளவும் முடியும். இதனால் அவர் பெரிய காயத்திற்கு உட்படுவதை தடுக்க முடியும்.
இதுபோன்ற ஆராய்ச்சி முறை வேல்ஸ் ரக்பி யூனியன் அணிக்கு உதவிக்கரமாக இருந்து வருகிறது. இது மற்ற போட்டிகளுக்கும் பரவ வாய்ப்பிருக்கிறது என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.