Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 13, 2016

தூண்டிலில் சிக்கிய ‘கின்னஸ்’ சாதனை


சுவீடன் நாட்டை சேர்ந்த ஜோயல் தூண்டிலை போட்டு அதிர்ஷ்டத்தை பிடித்திருக்கிறார். அதுவும் கின்னஸ் சாதனையை பதிவு செய்யும் அளவிற்கு பிரமாண்டமான அதிர்ஷ்டம். ஜோயல், விடுமுறை நாட்களில் தூண்டிலில் மீன் பிடிக்க ரொம்பவும் ஆசைப்படுவாராம். அப்படி ஒரு நாள் மீனிற்காக தூண்டிலை வீச... அதில் 565 கிலோ எடையுள்ள அதிர்ஷ்டம் சிக்கி உள்ளது. ஆமாங்க...! ஜோயலுக்கு சிக்கியது, 565 கிலோ எடையுள்ள சுறா மீன். மனிதர் தூண்டிலிலே இவ்வளவு பெரிய மீனை பிடித்து கின்னஸ் சாதனையை பதிந்துவிட்டார்.

‘‘சின்ன மீன் பிடித்தால் போதும் என்ற எண்ணத்தில் தான் கடலுக்குள் சென்றேன். ஆனால் இவ்வளவு பெரிய மீன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. இதற்காக கின்னஸ் சான்றிதழும் கொடுத்தார்கள். அதெல்லாம் சரி... இவ்வளவு பெரிய மீனை எப்படி சமைத்து சாப்பிடுவது என்று தான் தெரியவில்லை’’ என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பிரமாண்ட மீனை தூண்டில் போட்டு பிடித்தது மட்டுமில்லாமல், தூண்டில் அறுந்துவிடாமல் சுறா மீனை லாவகமாக கரைக்கும் கொண்டு வந்திருக்கிறார். உண்மையிலேயே சாதனை மனிதர் தான். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.