பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுமியின் ஆசையை நிறைவேற்றும் வகையில் அவரது பிறந்தநாளின்போது அந்த சிறுமியை வாழ்த்தியுள்ளார்.
தீவிரமான புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள ஹர்டிகா என்ற அந்த சிறுமி சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்டு, ஆக்சிஜன் சிலிண்டரின் துணையுடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், தனது அபிமான நடிகரான அமிதாப் பச்சனை ஒருமுறையாவது நேரில் சந்தித்துவிட வேண்டும் என ஆசைப்பட்டார்.
இதுதொடர்பான தகவல் அமிதாப் பச்சனுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஹர்டிகாவின் பிறந்தநாளன்று அவரை சந்திக்க அமிதாப் பச்சன் விரும்பினார்.
மும்பையில் உள்ள தனது இல்லத்துக்கு ஹர்டிகாவை வரவழைத்த அமிதாப், அவருக்கு பூங்கொத்து அளித்து வாழ்த்து தெரிவித்தார். அங்கேயே தனது பிறந்தநாள் கேக்கை வெட்டி, அந்த சிறுமி மகிழ்ந்த காட்சிகளை தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படங்களாக அமிதாப் வெளியிட்டுள்ளார்.
தைரியமாக புற்றுநோயை எதிர்த்துப் போராடிவரும் அந்த சிறுமியின் மனஉறுதியை பாராட்டியுள்ள அவர், ஹர்டிகா விரைவில் பூரண குணமடைய வாழ்த்தும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.