Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 16, 2016

கட்டிட பணியின் போது விபத்து ஆந்திராவில் மண்சரிவில் சிக்கி 7 தொழிலாளர்கள் பலி


ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே உள்ள லட்சுமிபுரத்தில் மிகப்பெரிய வணிக வளாகம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதில் அருகில் உள்ள கோட்டிப்பாடு கிராமத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த வணிக வளாகத்துக்கு அடித்தளம் அமைப்பதற்காக 30 அடி ஆழத்தில் குழி தோண்டப்பட்டு உள்ளது. இந்த குழியில் நேற்று முன்தினம் இரவு பணிகள் நடந்து கொண்டிருந்தது. இதில் சுமார் 18 தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது திடீரென மேலிருந்து மண் சரிந்து தொழிலாளர்கள் மீது விழுந்து அமுக்கியது. இந்த சேறு மற்றும் மண்சகதியில் 8 தொழிலாளர்கள் உயிரோடு புதைந்தனர்.

இதைத்தொடர்ந்து ராட்சத எந்திரங்கள் மூலம் அங்கு மீட்புப்பணிகள் முடுக்கி விடப்பட்டது. மேலும் மங்கலகிரியில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரும் அங்கு விரைந்து சென்று மண்ணில் புதைந்த தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் மண் குவியலுக்குள் சிக்கிய 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் படுகாயத்துடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்படும் என மாநில அரசு கூறியுள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.