தமிழக சட்டசபை தேர்தல் கடந்த 16–ந்தேதி நடைபெற்றது. தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் பணப்பட்டுவாடா பிரச்சினை காரணமாக தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதால், மீதம் உள்ள 232 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.
தமிழகம் முழுவதும் மொத்தம் 74.26 சதவீத வாக்குகள் பதிவாயின. 4 கோடியே 28 லட்சத்து 73 ஆயிரத்து 674 பேர் வாக்களித்தனர். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக வாக்களித்தனர்.
வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் தேர்தல் பார்வையாளர்கள், கட்சி ஏஜெண்டுகள் ஆகியோர் சரிபார்த்த பின்னர் சீல் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த பகுதிகளில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
தமிழகம் முழுவதும் மொத்தம் 68 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை மாவட்டத்தில் மட்டும் 3 இடங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதற்காக ராணிமேரி கல்லூரி, லயோலா கல்லூரி, கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் ஓட்டு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், ராணிமேரி கல்லூரியில் ஆர்.கே.நகர், திரு.வி.க.நகர், ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம்–திருவல்லிக்கேணி ஆகிய சட்டசபை தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன.
லயோலா கல்லூரியில் பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், எழும்பூர், ஆயிரம் விளக்கு, அண்ணாநகர் ஆகிய சட்டசபை தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராயநகர், மயிலாப்பூர், வேளச்சேரி ஆகிய சட்டசபை தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன.
ஓட்டு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்படுகிறது. 8.30 மணிக்கு மின்னணு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். முன்னணி நிலவரம் இன்னும் சற்று நேரத்தில் தெரிய வரும்
ஒரத்தநாடு தொகுதியில் தபால் ஓட்டுகளில் அ.தி.மு.க வேட்பாளர் அமைச்சர் வைத்தியலிங்கம் முன்னணியில் உள்ளார். முதலில் இங்கு தி.மு.க முண்னனியில் இருந்தது. தி.மு,க திருமயம், ஊட்டி, ஒரத்தநாடு உள்பட 77 இடங்களிலும், ஒரத்த நாடு உள்பட அ.தி.மு.க 90 இடங்களிலும் முன்னணியில் உள்ளது.
திருக்கோவிலூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் பொன்முடி முன்னிலை
திருவாரூர் தொகுதியில் தி.மு.க தலைவர் கருணாநிதி முன்னிலை வகிக்கிறார்
ஆர்.கே நகர் தொகுதியில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா முன்னிலை வைக்கிறார்
கொளத்தூர் தொகுதியில் தி.மு.க பொருளாளர் மு.க ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார்.
பாளையங்கோட்டை தொகுதியில் தி.மு.க வேட்பாளர் மைதீன் கான் பின்னடைவு, உளுந்தூர்பேட்டை தொகுதியில் விஜயகாந்த் பின்னடவை சந்திக்கிறார்
அ.தி.மு.க வேட்பாளர்கள் செங்கோட்டையன், நடிகர் கருணாஸ், அமைச்சர்கள் எம்.சி சம்பத்,வீரமணி ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.
தி.மு.க பேட்பாளர்கள் கீதா ஜீவன்,கே. என் நேரு முன்னிலை வகிக்கிறார்கள்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.