ஐ.பி.எல் கிரிக்கெட்டில் கொல்கத்தாவை சாய்த்து பெங்களூரு அணி 6-வது வெற்றியை பெற்றது. கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அணித்தலைவர் கோலி 75 ரன்களுடனும் (51 பந்து,5 பவுண்டரி, 3 சிக்சர்), டிவில்லியர்ஸ் 59 ரன்களுடனும் (31 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் இருந்தனர்.
இந்த போட்டியின் போது கொல்கத்தா வீரர் மனிஷ் பாண்டே கொடுத்த கேட்ச்சை டிவில்லியர்ஸ் பிடித்தார். நடப்பு தொடரில் டிவில்லியர்சின் 14-வது கேட்ச் இதுவாகும்.
இதன் மூலம் ஒரு சீசனில் அதிக கேட்ச் செய்த பீல்டர்களான டேவிட் மில்லர் (பஞ்சாப் அணிக்காக 2014-ம்ஆண்டில் 14 கேட்ச்), வெய்ன் பிராவோ (சென்னை அணிக்காக 2013-ம் ஆண்டில் 14 கேட்ச்)ஆகியோரின் சாதனையை டிவில்லியர்ஸ் சமன் செய்துள்ளார்.
டிவில்லியர்ஸ் இதுவரை 11 போட்டிகளில் ஆடி 538 ரன்களைக் குவித்துள்ளார். இதில் நான்கு அரை சதமும், ஒரு சதமும் அடக்கம். மறுபக்கம் கோஹ்லி 3 சதத்துடன் 700 ரன்களைத் தாண்டி ஓடி விட்டார்.
இந்த நிலையில் பெங்களூர் அணியைச் சேர்ந்த டிஜிட்டல் அணியின் உறுப்பினரான நாக்ஸ் என்பவர் டிவில்லியர்ஸிடம் பேசுகையில், நீங்கள் ஏன் பேசாமல் இந்தியக் குடியுரிமை வாங்கக் கூடாது? பெரும்பாலான நேரத்தை இந்தியாவில்தான் கழிக்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு சிரித்தபடி பதிலளித்த டிவில்லியர்ஸ், நானும் அப்படித்தான் நினைக்கிறேன். பேசாமல் பிரதமர் நரேந்திர மோடியைப் பார்த்து விட வேண்டியதுதான் என்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.