Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 24, 2016

80 லட்சம் பேருக்கு இனி மின் கட்டணம் கிடையாது: கணக்கீடு எவ்வாறு?


 
தமிழ்நாட்டில் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்குவதன் மூலம், சுமார் 80 லட்சம் பேர் பயனடைவார்கள் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 தமிழகத்தில் வீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். தேர்தலில் வெற்றி பெற்று திங்கள்கிழமை மீண்டும் முதல்வராக பதவியேற்றார்.
இதைத்தொடர்ந்து, வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட 5 முக்கியத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு கையெழுத்திட்டார். அதன்படி மே 23-ஆம் தேதி முதல் தமிழகத்தில் அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் 500 யூனிட்டுக்கும் குறைவாக பயன்படுத்துவோருக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ. 3 முதல் ரூ. 4.60 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 500 யூனிட்டுக்கும் குறைவாக பயன்படுத்துவோருக்கு அரசு குறிப்பிட்ட அளவு மானியம் வழங்குகிறது.
 500 யூனிட்டுக்கும் அதிகமாக பயன்படுத்துவோர் ஒரு யூனிட்டுக்கு ரூ. 6.60 கட்டணம் செலுத்துகின்றனர். 500 யூனிட்டுக்கும் அதிகமாக பயன்படுத்துவோருக்கு மானியம் வழங்கப்படவில்லை.
 புதிதாக அறிவிக்கப்பட்டிருக்கும் திட்டத்தின்படி ஒருவர் எத்தனை யூனிட் மின்சாரம் பயன்படுத்தியிருந்தாலும் அவருக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். உதாரணமாக ஒருவர் இரண்டு மாதங்களில் 600 யூனிட் மின்சாரம் பயன்படுத்தியிருந்தால், அவர் 500 யூனிட்டுக்கான பணத்தை செலுத்தினால் போதுமானது. திங்கள்கிழமை (மே 23) முதல் இந்தத் திட்டம் அமலுக்கு வருகிறது. எனவே திங்கள்கிழமைக்கு பின்பு எடுக்கப்படும் அனைத்து கணக்கீடுகளுக்கும் இந்தச் சலுகை பொருந்தும்.
 இது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் கூறியது:
 எந்தவித வரைமுறைகளும் இன்றி அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். இதற்காக தமிழக அரசு ரூ. 1,607 கோடி மானியம் வழங்குவதால், மின்சார வாரியத்துக்கு எவ்வித இழப்பும் ஏற்படாது என்றனர் அவர்கள்.
தமிழகத்தில் 100 யூனிட் வரை சுமார் 80 லட்சம் பேர் பயன்படுத்தி வருகின்றனர். இனி, இந்த 80 லட்சம் பேர் மின் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்படாது. 200 யூனிட் வரை 57 லட்சம் பேரும், 500 யூனிட் வரை 48 லட்சம் பேரும், 500 யூனிட்டுக்கு மேல் சுமார் 9 லட்சம் பேரும் மின் நுகர்வோர்களாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.