கடந்த மே மாதம் சிங்கப்பூரில் நடைபெற்ற 19 வது ஆசிய தடகளப் போட்டியில், இந்தியாவுக்காக 2 தங்கம் மற்றும் ஒரு வெண்கல பதக்கங்களை வென்று பெருமிதத்துடன் திரும்பியிருக்கிறார் கோவை, பீளமேடு பகுதியைச் சேர்ந்த லட்சுமி லோகநாதன். இவருக்கு வயது 70 என்பதுதான் இதில் ஹைலைட். ஆம், இவர் பங்குபெற்றது முதியோருக்கான தடகளப் போட்டிகள்!
''சாதிக்க முயற்சி மட்டும் இருந்தால்போதும், வயது என்பது ஒரு பொருட்டே இல்லை'' என உற்சாகம் பொங்கப் பேசுகிறார், லட்சுமி லோகநாதன்.
''நான் என் வீட்டுக்கு ஒரே பெண். ஒவ்வொரு முறை விளையாட்டு போட்டிக்கு போகும்போதும் வீட்டில் போராட்டம்தான். பெண் என்பதைக் காரணம் காட்டி ஒவ்வொருவரும் தடையும் தடங்கலும் ஏற்படுத்தும்போது, சாதிக்கணும்னு வெறி அதிகரிக்குமே தவிர, என்னைக்குமே மனம் சோர்ந்து போனதில்லை. பள்ளி, கல்லூரிகளில் மாவட்ட அளவில் பரிசு பெற்றிருக்கிறேன்'' எனச் சொல்லும் லட்சுமி லோகநாதன், தனது சாதனைக்கு தன் கணவரின் பங்களிப்பும் மிக அதிகம் என்பதையும் பெருமைப்பொங்க பகிர்ந்துகொண்டார்.
''திருமணத்துக்குப் பிறகு என் கனவு என்னவாகுமோ என்ற கலக்கம் இருந்தது. ஆனால், என்னைப் புரிந்துகொண்ட ஒருவர் கணவராக வாய்த்தது, கடவுளின் வரம்தான். என் கணவர், என்னை உடற் கல்வி பயிற்சியாளருக்கு படிக்கவைத்து என் கனவுக்கு ஒரு தொடர்ச்சி கொடுத்தார். படிப்பு முடிச்சு அரசுப் பள்ளி ஒன்றில் உடற்பயிற்சி ஆசிரியராகப் பணியில் சேர்ந்தேன். அங்கு நிறைய பெண்களை விளையாட்டு வீராங்கனைகளாக மாற்றும் வாய்ப்பு கிடைத்தது. சிறிது காலத்துக்குப் பிறகு விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டு, என் இலக்கை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தேன். 'இந்த வயசுக்கு அப்புறம் ஏன் இந்த வேண்டாத வேலை' ன்னு எல்லாரும் என்னை கிண்டல்கூட பண்ணியிருக்காங்க. ஆனா, நான் அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை.

தினமும் காலை - மாலை என இரண்டு வேளையும் முழு அளவில் பயிற்சியில் ஈடுபட்டேன்.
2003-ல் 'ஒப்பன் டூ ஆல்' என்ற மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் வெற்றி பெற்றேன். அதன் பிறகும் மாநில அளவிலும், தேசிய அளவிலும் எனது வெற்றிகள் தொடர்ந்தன. இந்தியாவுக்காக ஒரு வெண்கல பதக்கம் பெற்றேன். இந்த வெற்றிகள், தொடர்ந்து சாதிக்கவேண்டும் என்ற உந்துதலைத் தந்தன.'' என்று தனது வெற்றி பயணம் குறித்து பகிர்ந்துகொண்ட லட்சுமி லோகநாதன், இது வரை ஏழு ஆசிய தடகளப் போட்டிகளில் பங்கேற்றிருக்கிறார். ஒவ்வொருமுறையும் ஏதேனும் ஒரு பதக்கம் பெறாமல் திரும்பியதில்லையாம்.
'இந்த முறை உயரம் தாண்டுதலில் தங்கம், 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கம், மும்முறை உயரம் தாண்டுதலில் வெண்கலம் என 3 பதக்கங்களை பெற்றது மிகவும் மகிழ்ச்சி அளித்தது என்றால், என்னோட இந்த 70 வயதில் உடற் கல்வி படிப்பில் முனைவர் பட்டமும் பெற்றிருப்பது... கூடுதல் சந்தோஷம் '' என்று நெஞ்சம் நெகிழ பேசியவர், முத்தாய்ப்பாக இப்படிக் கூறி முடித்தார்...
''பெண்கள் நினைத்தால் எப்போதும் சாதிக்க முடியும்... சாதிக்க எதுவும் தடையில்லை!"

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.