Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 14, 2016

ரூ.570 கோடி பிடிபட்டது உண்மையே


திருப்பூரில் வாகன சோதனையில் கன்டெயினர் லாரிகளில் கட்டுக் கட்டாக பணம் பிடிக்கப்பட்டது குறித்து திருப்பூர் கலெக்டர் ஜெயந்தி விளக்கம் அளித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், சோதனையில் பிடிபட்டது ரூ.570 கோடி தான். இது தொடர்பாக விசாரணை நடத்த தனி விசாரணை குழு அமைக்கப்பட உள்ளது. காலை தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி பிடிபட்டது ரூ.195 கோடி என கூறி இருந்தார். அது உண்மை தான். அப்போது வரை வங்கி அதிகாரிகள் ஒரு ஆவணத்தை மட்டும் தாக்கல் செய்திருந்தனர். அந்த கணக்கின்படி ரூ.195 கோடி தான். தற்போது 3 ஆவணங்களை காட்டி உள்ளனர். இதன் மதிப்பு ரூ.570 கோடி. மொத்த பணம் குறித்து வங்கி அதிகாரிகள் வந்தாலே முழு விபரம் தெரியும் என்றார். இந்த பணம் கோவையில் இருந்து ஆந்திராவுக்கு வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்பட்டது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.