May 29, 2016
44000 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர்
மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் இந்தியாவில் சுமார் 44000 குழந்தைகள் வருஷத்தில் காணாமல் போனது குறித்து பதில் அளிக்குமாகு மத்திய அரசுக்கும், அனைத்து மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. an average 44000 children are reported missing every yearஇந்தியாவில் இதுவரை44,000 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இக்குழந்தைகளின் நிலை என்னவென்று இதுவரை எந்த விவரமும் இல்லை.காணாமல் போகும் குழந்தைகள் பற்றி வரும் புகார்கள் மீது உரிய விசாரணை நடத்த காவல்நிலையங்கள் தவறிவிட்டன என்றும், கடத்திச் செல்லப்படும் குழந்தைகளின் உடல் பாகங்கள் பிடுங்கப்பட்டு அவை பிச்சை எடுக்கும் கொடுமைக்கு உட்படுத்தப்படலாம் அல்லது கடத்தல், விபச்சாரம், தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படலாம் என்று பொது நலன் மனுவை தாக்கல் செய்த சர்வ மித்ரா தனது மனுவில் கூறியுள்ளார்.
காணாமல் போன குழந்தைகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று தொடரப்பட்ட பொது நலன் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி அப்தாப் அலாம் மத்திய, மாநில அரசுகள் இதன் மீது எடுத்துள்ள நடவடிக்கை குறித்து பதிலளிக்க வேண்டும் என்று கூறினார். வருஷத்தில்
44000 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
May 29, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
May 29, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.