இமாச்சல பிரதேசத்தில் மூன்று வெவ்வேறு இடங்களில் வாகனங்கள் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 41 பேர் பலியாகி உள்ளனர்.
இமாச்சல பிரதேச மாநிலம் சம்பா மாவட்டத்தில் நேற்று இரவு பயணிகளை ஏற்றிச் சென்ற ஒரு பஸ், பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கியது. இதில் 17 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
இதேபோல் கின்னார் மாவட்டத்தில் சாரா-கம்மா இணைப்பு சாலையில் சென்ற வாகனம் பாடா கம்பா அருகில் உள்ள 300 அடி ஆழ பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கியது. திருமணமான மணமகளை புகுந்த வீட்டில் கொண்டு விட்டபின்னர், அவரது குடும்பத்தினர் ஊருக்கு திரும்பியபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 13 பேர் பலியாகினர். ஒருவர் மட்டும் வாகனத்தில் இருந்து வெளியில் எகிறி குதித்ததால் காயங்களுடன் உயிர் தப்பியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இன்று தியோக் துணைக் கோட்டத்தில் உள்ள பஜ்ரோலி பாலம் அருகில் சென்ற அரசு பேருந்து பள்ளத்தில் விழுந்ததில் 11 பேர் உயிரிழந்தனர். 25 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 24 மணி நேரத்தில் மட்டும் விபத்துக்களில் 41 உயிர்கள் பலியாகி உள்ளனர்.
இந்த விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உடனடி நிவாரணமாக தலா 50 ஆயிரம் ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களை முதலமைச்சர் வீரபத்ர சிங் இன்று பார்த்து ஆறுதல் கூறினார். மேலும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் வாகனங்களை ஓட்டவேண்டும் என்றும், அலட்சியமாகவோ, தாறுமாறாகவோ ஓட்ட வேண்டாம் என்றும் முதலமைச்சர் வலியுறுத்தி உள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.