பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் யூசுப் ராஸா கிலானி. பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மூத்த தலைவர். இவரது மகன் அலி ஹைதர் கிலானி. இவர் அங்குள்ள முல்தான் நகரில் கடந்த 2013-ம் ஆண்டு, மே மாதம் 9-ந் தேதி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் கடத்திச்சென்று விட்டனர்.
இந்த நிலையில் அவர் ஆப்கானிஸ்தான் நாட்டின் கஜினி மாகாணத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்க கூட்டுப்படைகள் அல்கொய்தா ஆதரவு குழுவின்மீது நேற்று அதிரடி தாக்குதல் நடத்தி பத்திரமாக மீட்கப்பட்டார். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், விரைவில் பாகிஸ்தான் திரும்புவார் எனவும் தகவல்கள் கூறுகின்றன.
இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அலி ஹைதர் கிலானியை பாகிஸ்தான் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் நடப்பதாக கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள தகவலில், “முன்னாள் பிரதமர் யூசுப் ராஸா கிலானியின் மகன் அலி ஹைதர் கிலானி, வெற்றிகரமாக மீட்கப்பட்டு விட்டார். இறைவனுக்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.
இதை முல்தான் நகரிலும், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலும் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.