Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 17, 2016

வேலூரில் விடுப்பில் சென்ற வெயில்.. விறுவிறு வாக்குப்பதிவு


தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கிய நிலையில் வேலுார் மாவட்டத்தில்  பகல் 12.30 மணி நிலவரப்படி 34.64 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

வேலுார் மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வழக்கத்துக்கு மாறாக இன்று காலநிலை குளிர்ச்சியாகவும் சாரல் மழை மற்றும் பல இடங்களில் வானம் மேக மூட்டம் என பலவிதங்களில் பொதுமக்களுக்கு சாதகமாக இருப்பதால் வாக்காளர்கள் சிரமங்களின்றி வாக்களித்து வருகின்றனர்.



வேலுார் மாவட்டத்தில் தொகுதி வாரியாக பகல் 12 மணி நிலவரப்படி பதிவான வாக்குகள் நிலவரம்
வேலூர் 35%, காட்பாடி 37%, கேவி. குப்பம் 38%, குடியாத்தம். 37%, ஆம்பூர் 26%, வாணியம்பாடி 35%, ஜோலார்பேட்டை 41% , திருப்பத்தூர் 36%, ஆற்காடு 19.82% , ராணிப்பேட்டை 36% , சோளிங்கர் 41%, அரக்கோணம் 35.5%, அணைக்கட்டு 33% என பதிவாகியுள்ளது.

மொத்தமாக வேலூர் மாவட்டத்தில் பதிவான வாக்குகள் சதவீதம் 34.64% என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.