Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 9, 2016

வில்லிவாக்கத்தில் வீட்டுக்கு வீடு பணம் கொடுத்த 3 அதிமுக நிர்வாகிகள் கைது


வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த அதிமுகவினர் 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திமுகவினர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால், பணிந்த போலீசார் அதிமுகவினர் மீது வழக்கு பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் முழுவதும் வரும் 16ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பணம் கொடுப்பதை தடுப்பதை முதன்மையான நோக்கமாக வைத்து தேர்தல் ஆணையம் செயல்பட்டு கொண்டுள்ளது.

இதுவரை 84 கோடி அளவுக்கு பிடிப்பட்டுள்ளது. இந்நிலையில் அண்ணாநகர் தொகுதியில் அடங்கிய வில்லிவாக்கம் சிட்கோ நகர் 33வது தெருவில், அதிமுகவினர் சிலர், வாக்காளர்களுக்கு நேற்று இரவு 7 மணியளவில் பணம் பட்டுவாடா செய்தனர். இதை அறிந்ததும், அப்பகுதியை சேர்ந்த ஏராளமான திமுகவினர், அங்கு சென்றனர். இதற்கிடையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி இனியனுக்கு தகவல் கொடுத்தனர். அவரும் சம்பவ இடத்துக்கு அதிகாரிகளுடன் சென்றார். இதை பார்த்ததும், அங்கிருந்த அதிமுகவினர், தப்பியோடினர். அதில் 3 பேரை, திமுகவினர் விரட்டி சென்று மடக்கி பிடித்து, பறக்கும் படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

அவர்களிடம் விசாரித்தபோது, அதே பகுதியை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் முத்துகிருஷ்ணன் (70), வடிவேல் (60) என தெரிந்தது. மற்றொருவர் பெயர் தெரியவில்லை. அவர்களிடம் இருந்து அதிமுக துண்டு பிரசுரங்கள், ரூ.4,500 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதையடுத்து, அவர்களை வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் சேர்த்தனர். ஆனால் போலீசார், அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவி–்ல்லை. இதனால், ஆத்திரமடைந்த திமுகவினர் 50க்கு மேற்பட்டோர், வில்லிவாக்கம் காவல் நிலையத்துக்கு சென்றனர்.

தேர்தல் விதிகளை மீறி பணம் பட்டுவாடா செய்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷமிட்டனர். பின்னர், எதிரே உள்ள சிடிஎச் சாலையில் திடீர் மறியல் போரட்டம் நடத்தினர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது. இதையடுத்து போலீசார், சம்பந்தப்பட்ட அதிமுகவினர் 3 பேர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். ஆனால், அதனை திமுகவினர் ஏற்கவில்லை. வழக்குப்பதிவு செய்தால் மட்டுமே, போராட்டத்தை கைவிடுவோம் என்றனர். இதையடுத்து போலீசார், அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதன்பின்னர், அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால், வில்லிவாக்கம் பகுதியில் சுமார் ஒன்றரை மணிநேரம் பரபரப்பும், பதற்றமும் நிலவியது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.