May 13, 2016
டாஸ்மாக் கடைகள் 3 நாள் அடைப்பு : இப்ப ஒரு ஆளுக்கு 3 குவார்ட்டர்தான்
காரைக்குடி: சட்டமன்ற தேர்தல் வரும் 16ல் நடக்க உள்ளது. இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வரும் 14, 15, 16 மற்றும் 19 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கான கொள்முதல் கடந்த 5ம் தேதியுடன் நிறுத்தப்பட்டது. கையிருப்பில் உள்ள சரக்குகளை மட்டும் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.நாளை மறுதினம்(14) முதல் டாஸ்மாக் கடைகள் 3 நாட்களுக்கு தொடர்ந்து அடைக்கப்படும். இதனால் டாஸ்மாக் கடைகளில் ‘குடிமகன்கள்’ கூட்டம் அலைமோதுகிறது. மேலும் இன்று காலை முதல் நாளை இரவு வரை ஒரு நபருக்கு அதிகபட்சமாக 3 குவார்ட்டர்களுக்கு மேல் வழங்குவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் மதுபான ஊழியர் ஒருவர் கூறுகையில், தேர்தலை முன்னிட்டு நாளை மறுநாள் முதல் டாஸ்மாக் கடைகள் தொடர்ச்சியாக 3 நாட்கள் அடைக்கப்படுவதால், மதுபிரியர்கள் திரளாக வந்து மதுபானங்களை வாங்கி செல்கின்றனர். மேலும் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதால் அதிகளவில் ‘குடிமகன்கள்’ குவிந்துள்ளனர் என்றார்.
டாஸ்மாக் கடைகள் 3 நாள் அடைப்பு : இப்ப ஒரு ஆளுக்கு 3 குவார்ட்டர்தான்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
May 13, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
May 13, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.