Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 12, 2016

ரூ. 2 கோடி பணம் பதுக்கல் புகார் அதிமுக பிரமுகர் வீட்டில் பறக்கும்படை முற்றுகை தந்தை திடீர் சாவு



சேலம்: அதிமுக பிரமுகரின் வீட்டில் ரூ.2 கோடி வரை பணம் பதுக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்ததால் அங்கு பறக்கும்  படையினர் ரெய்டு நடத்த வந்தனர். அப்போது அந்த அதிமுக பிரமுகரின் தந்தை திடீரென உயிரிழந்தார். சேலம் மாவட்டம்  வாழப்பாடி பகுதியில் வாக்காளர்களுக்கு அதிமுகவினர் நேற்று பணம் கொடுக்கத் தொடங்கினர்.  இதற்காக அதிமுக நகர  செயலாளர் சிவக்குமார் வீட்டில் ரூ. 2 கோடி பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கூறி, அவரது வீட்டை திமுக உள்ளிட்ட  எதிர்கட்சியினர் இரவில் முற்றுகையிட்டனர். வாழப்பாடி போலீசார், ஏற்காடு தொகுதி தேர்தல் அலுவலர்களுக்கு புகார் அளித்தும்  அவர்கள் சோதனைக்கு வரவில்லை. அதே நேரத்தில் அதிமுகவினரும் அங்கு திரண்டனர். இரு தரப்புக்கும் வாக்குவாதம்  ஏற்பட்டது.

 நீண்ட தாமதத்துக்கு பின்பே, கந்தசாமி தலைமையிலான பறக்கும் படையினர் இன்று அதிகாலையில் ரெய்டுக்கு வந்தனர்.  அவர்கள் வீட்டிற்கு வெளியே நின்று, கட்சியினருடன் பேசி கொண்டிருந்தபோது, வீட்டின் 2வது மாடியில் இருந்து திடீரென  சத்தம் கேட்டது. உள்ளே சென்று பார்த்தபோது, சிவக்குமாரின் தந்தை நாகராஜ் (76) பாத்ரூமுக்கு வெளியே விழுந்து கிடந்தார்.  அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால்  வழியிலேயே நாகராஜ் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள்  தெரிவித்தனர். இச்சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் ரெய்டு நடத்தாமல் திரும்பி 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.