ஒரு ரூபாய்கூட வாங்காமல் 23 லட்சம் பேர் பா.ம.க.வுக்கு வாக்களித்துள்ளனர் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.
பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ''நாங்கள் அரசியலை மக்கள் சேவையாக செய்து வருகிறோம். ஆனால் திராவிட கட்சிகள் அரசியலை வியாபாரமாக செய்கின்றனர்.
பா.ம.க.வுக்கு மாநிலம் முழுவதும் 23 லட்சம் பேர் வாக்களித்து உள்ளனர். ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்காமல் இத்தனை பேரும் பா.ம.க.வுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
தேர்தல் முடிவில் திராவிட கட்சிகள் வெற்றி பெற்றாலும் பண பலத்தினாலேயே வெற்றி பெற்று உள்ளார்கள். நலத்திட்டங்களை மறந்து பணத்துக்காக மக்கள் வாக்களித்தது வருத்தமாக உள்ளது. பா.ம.க. மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளது. தோல்விகளால் நாங்கள் துவண்டுபோய் விடவில்லை. முன்பைவிட வேகமாக பணியாற்றுவோம்.
வருங்காலங்களிலும் திராவிட கட்சிகளுடன் கூட்டணி கிடையாது. பா.ம.க. தனித்தே போட்டியிடும். வெற்றி பெற்ற அ.தி.மு.க., தி.மு.க.வினருக்கு எங்களது வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறோம். சட்டசபையில் நாங்கள் இடம் பெறாவிட்டாலும் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக பணியாற்றுவோம்" என்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.