Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 28, 2016

ஸ்பெல்லிங் பீ போட்டி: இளம்வயதில் வென்று சாதனை படைத்த இந்திய-அமெரிக்க சிறுவன்


அமெரிக்காவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் 'ஸ்கிர்ப்ஸ் ஹொவார்ட் நேஷனல் ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 11 வயது சிறுவன் முதன்முதலாக சாதனை படைத்துள்ளான்.

அமெரிக்காவில் மாணவ-மாணவியரின் எழுத்துகூட்டி வாசிக்கும் வாசிப்புத்திறனை மேம்படுத்தும் நோக்கில் ஆண்டுதோறும் ஸ்பெல்லிங் பீ போட்டி நடத்தப்பட்டு வருகின்றது.

சுமார் ஒரு கோடி மாணவ-மாணவியர் இந்த ஆண்டுப் போட்டியில் பங்கேற்க விண்ணப்பித்திருந்தனர். இதில் இறுதிச்சுற்றுக்கு 285 பேர் தேர்வாகியிருந்தனர்.

இறுதியாக பத்து பேருக்கு இடையில் ‘டைஅப்’ போட்டி நிலவியது. இதில் தாக்குப்பிடித்த ஏழுபேர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களாக இருந்தனர். இந்த போட்டியின் 24-வது சுற்றில் 'gesellschaft' என்ற வாக்கியத்தை அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் வசித்துவரும் நிஹார் சாய்ரெட்டி ஜங்கா(11) என்ற இந்திய வம்சாவளி மாணவன் மிகசரியான உச்சரிப்புடன் எழுத்துக்கூட்டி வாசித்தான். இதன்மூலம் மிகச்சிறிய வயதில் இந்த போட்டியில் வெற்றி பெற்றவன் என்ற சாதனையை நிஹார் சாய்ரெட்டி ஜங்கா ஏற்படுத்தியுள்ளான்.

இதேபோல், நியூயார்க் நகரில் வசித்துவரும் இந்திய வம்சாவளி மாணவனான ஜெய்ராம் ஜகதீஷ் ஹத்வார்(13) 'Feldenkrais' என்ற வாக்கியத்தை மிகச்சரியான உச்சரிப்புடன் எழுத்துக்கூட்டி வாசித்தான். இதையடுத்து, 'ஸ்கிர்ப்ஸ் ஹொவார்ட் நேஷனல் ஸ்பெல்லிங் பீ’ சுழற்கோப்பையையும், பரிசுத்தொகையான 38 ஆயிரம் டாலர் பணத்தையும் இவர்கள் இருவரும் பகிர்ந்து கொண்டனர்.

கடந்த ஒன்பது ஆண்டுகளாக தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த போட்டியில் இந்திய வம்சாவளி மாணவ-மாணவியரே அதிக அளவில் வெற்றி பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.