Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 17, 2016

மே-18 தமிழரின் வரலாற்றில் இரத்தக்கறை படிந்தநாள்! -



2009ம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி தமிழரின் வரலாற்றில் இரத்தக்கறை படிந்தநாள் என முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்பாக வட மாகாணசபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி இலங்கைத் தமிழரின் வரலாற்றில் மறக்க முடியாத நாள். சர்வதேச யுத்த விதிகளைப் புறந்தள்ளி கொத்துக் கொத்தாக எமது உறவுகளைக் கொன்றொழித்த இறுதிநாள்.
    
தமிழரின் வரலாற்றில் இரத்தக்கறை படிந்தநாள். இந்நாளை எமது தமிழ் மக்கள் இரத்த சரித்திரம் எழுதிய துக்கதினமாக வரலாறு உள்ளவரை அனுஸ்டிக்கவேண்டும். கடந்த 2015 ஆம் ஆண்டில் வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட அனைவருக்குமாக நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது. இம்முறையும் மே மாதம் 18 ஆம் திகதி இவ்வாறான நிகழ்வை அனுஸ்டிப்பதற்கான ஒழுங்குகள் வடக்கு மாகாண சபையினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்காக மாகாண முதலமைச்சர் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதில் அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர். அவர்கள் மே மாதம் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை முள்ளிவாய்க்காலில் அனுஸ்டிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் மே 18 ஆம் திகதி வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மத வழிபாட்டுத்தலங்களிலும் காலை 6.00 மணிமுதல் 9.00 மணிவரையான காலப்பகுதியில் யுத்தத்தின் போது படுகொலை செய்யப்பட்டவர்களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறு மக்களை கேட்டுக் கொள்கிறோம்.
மே மாதம் 18 ஆம் திகதி காலை 9.00 மணிதொடக்கம் 10.00 மணிவரை முள்ளிவாய்க்கால் கிழக்கு பாடசாலைக்கு அருகில் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. இதில் மாகாண முதலமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மதப்பெரியார்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொள்வார்கள்.
இதன்போது யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான ஆத்ம சாந்திப் பிரார்த்தனை, மலரஞ்சலி செலுத்துதல், தீபமேற்றுதல் போன்ற நிகழ்வுகள் நடைபெறும். விசேட நிகழ்வு 10.00 மணிவரை நடந்தாலும் மாலை 5.00 மணிவரை மேற்படி நிகழ்வுகள் நடைபெறுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. நிகழ்வில் கலந்து கொள்ளும் பொதுமக்களின் நன்மை கருதி. முல்லைத்தீவு பேரூந்து நிலையத்திலிருந்து முள்ளிவாய்க்கால் வரைவிசேட போக்குவரத்து ஒழுங்குகள்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.