Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 15, 2016

17 வயது மாணவனுடன் ஆசிரியை ஓட்டம்


உத்தரபிரதேச மாநிலத்தில் 17 வயது மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் 16 வயது மாணவன் சிவசுப்பிரமணியனுடன் 25 வயது ஆசிரியை கோதைலட்சுமி ஓடிசென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதேபோன்ற சம்பவம் உத்தரபிரதேசம் மாநிலத்திலும் நடந்து உள்ளது.

அங்குள்ள சகரான்பூர் என்ற இடத்தை சேர்ந்த மாணவர் அனுப் (வயது17). 11–ம் வகுப்பு படித்து வந்தார். அவர் 25 வயது ஆசிரியை ஒருவரிடம் தினமும் டியூசனுக்கு சென்று வந்தார். அவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது. 2 நாட்களுக்கு முன்பு 11–ம் வகுப்பு பரீட்சை முடிந்தது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்யும் நோக்கத்துடன் ஊரைவிட்டு ஓடிவிட்டனர்.

பின்னர் அவர்கள் அனைவரும் அம்பாலாவில் உள்ள அனூப் அத்தை வீட்டுக்கு சென்றனர். இதுபற்றி பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதில் என்ன முடிவு எடுப்பது என தெரியாமல் பெற்றோர்களும், உறவினர்களும் குழப்பத்தில் உள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.