ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் பயணம் செய்த 25 பேர் படுகாயமடைந்தனர்.
ஹிமாச்சல பிரதேசம், சம்பா மாவட்டத்தில் உள்ள நூல்லா என்ற இடத்தில் நேற்று மாலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ஹிமாச்சல பிரதேசத்தில் சாங்கினியில் இருந்து சம்பா டல்ஹெளசி நோக்கி 40 பயணிகளுடன் வந்து கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதில் பேருந்தில் பயணித்தவர்களில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக சம்பா மாவட்ட போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் பேருந்தில் காயமடைந்த 25க்கும் அதிகமானோர் அருகில் உள்ள பத்ரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் உயரிழந்தவர்களுக்கு உடனடி நிவாரணமாக பத்தாயிரம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாயும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.