வியாசர்பாடியில் ரோட்டில் நடந்து சென்றவர்களை முகமூடி கும்பல் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வியாசர்பாடி மெகசின்புரம், மல்லிகைப்பூ காலனி, ஏ.கல்யாணபுரம், சி.கல்யாணபுரம் பகுதியில் நேற்றிரவு 10 மணியளவில் ஒரு மர்மகும்பல் மோட்டார் சைக்கிளில் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்தது.
3 மோட்டார் சைக்கிளில் 6 பேர் வீதிகளில் பட்டா கத்தி, அரிவால் போன்ற ஆயுதங்களுடன் சென்று தாக்கினர். முகத்தை கை குட்டையால் மூடி மறைத்து இருந்த அவர்கள் வீதிகளில் நின்ற அப்பாவி மக்களை சரமாரி தாக்கினார்கள். வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தவர்கள் மீதும் நடந்து சென்றவர்கள் மீதும் அரிவாலால் வெட்டினார்கள்.
இதில் கை, கால்கள், முதுகு, மார்பு போன்ற இடங்களில் வெட்டு காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி சாய்ந்தனர். மது போதையில் இந்த கொடூர தாக்குதலை நடத்துவிட்டு மோட்டார் சைக்கிளில் அவர்கள் தப்பி சென்றனர்.
மர்ம கும்பலின் தாக்குத லில் 14 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை உறவினர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொண்டு சேர்த்தனர். ஸ்டாலின் அரசு ஆஸ் பத்திரியில் 6 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த கொடூர தாக்குதலில் மெகசின்புரத்தை சேர்ந்த ஆசிரியர் சந்துரு படுகாயம் அடைந்தார்.
கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய பாலிடெக் மாணவர் சுரேஷ்குமாரை (17) முதுகில் அந்த கும்பல் வெட்டியது. வீட்டு வாசலில் நின்ற பெயிண்டர் பிரேம்குமாருக்கு (30).
கழுத்தில் வெட்டு விழுந்தது. மர்ம கும்பல் எதற்காக இந்த தாக்குதலில் ஈடுபட்டனர். எந்த நோக்கத்திற்காக அவர்கள் வந்தார்கள் என்பது தெரியவில்லை.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் திடீர் சாலைமறியல் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ரவுடி கும்பல் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலுயுறுத்தி நடந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வியாசர்பாடி போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
பொது மக்களை கொடூரமாக தாக்கியவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதோடு 2 பேரை கைது செய்துள்ளனர். பிடிப்பட்ட வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த அருள், கல்யாணபுரத்தை சேர்ந்த தீனன் ஆகியோரிடம் விசாரணை நடக்கிறது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.