Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 27, 2016

139-க்கு அழைத்து ஆர்.ஏ.சி., காத்திருப்போர் பட்டியல் டிக்கெட்டும் ரத்து செய்யலாம்: ரெயில்வேயில் கூடுதல் வசதி


139-க்கு அழைத்து ஆர்.ஏ.சி., காத்திருப்போர் பட்டியல் டிக்கெட்டும் ரத்து செய்யலாம். ரெயில்வேயில் கூடுதல் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

139-க்கு அழைத்து ஆர்.ஏ.சி., காத்திருப்போர் பட்டியல் டிக்கெட்டும் ரத்து செய்யலாம்: ரெயில்வேயில் கூடுதல் வசதி
புதுடெல்லி:

ரெயில்வேயில் டிக்கெட்டை ரத்து செய்தல் மற்றும் பணம் திரும்ப பெறுவதில் இருந்த சிரமத்தை களையும் நோக்கில் செல்போன் மூலம் டிக்கெட் ரத்து செய்யும் வசதியை மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கிவைத்தார்.

139 என்ற எண்ணுக்கு அழைத்து டிக்கெட்டை ரத்து செய்யும் இந்த புதிய வசதி, உறுதி செய்யப்பட்ட டிக்கெட் வைத்திருக்கும் பயணிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. ஆர்.ஏ.சி. மற்றும் காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் பயணிகளுக்கு இந்த வசதி அளிக்கப்படவில்லை.

தற்போது இத்தகைய டிக்கெட் வைத்திருக்கும் பயணிகளுக்கும் செல்போன் மூலம் ரத்து செய்யும் வசதி நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. ஆர்.ஏ.சி. மற்றும் காத்திருப்போர் பட்டியல் டிக்கெட் வைத்திருக்கும் பயணிகள், தங்கள் டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டுமெனில் 139-க்கு போன் செய்து கணினி குரல் பதிவில் 6-ஐ தேர்வு செய்ய வேண்டும்.

அப்போது அவர்களுக்கு ஒருமுறை கடவுச்சொல் (ஒன்டைம் பாஸ்வேர்டு) ஒன்று வழங்கப்படும். அதை தாங்கள் பயணத்தை தொடங்கும் ரெயில் நிலையத்தில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் செலுத்தி டிக்கெட் பணத்தை திரும்ப பெறலாம்.

இந்த புதிய வசதி மூலம், உறுதி செய்யப்பட்ட டிக்கெட் வைத்திருக்கும் பயணிகள் ரெயில் கிளம்பும் 4 மணி நேரத்துக்கு முன்பு வரையும், ஆர்.ஏ.சி., காத்திருப்போர் பட்டியல் டிக்கெட் வைத்திருக்கும் பயணிகள் ½ மணி நேரத்துக்கு முன் வரையும் டிக்கெட்டை ரத்து செய்ய முடியும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.