ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிளியொன்று தனது 100–வது பிறந்த தினத்தை கொண்டாடிய சம்பவம் உலகையே ஆச்சரியப்படுத்தி உள்ளது. ஆஸ்திரேலியாவின் ஹோபார் நகருக்கு அருகிலுள்ள சரணாலயத்தில் தான் கிளியின் பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது. 100 வயதை கடந்திருக்கும் அந்தக் கிளியின் பெயர் பிரெட். இது ‘சல்பர் கிரஸ்டடு’ என்ற இனத்தைச் சேர்ந்தது.
முதலாம் உலகப்போரின் ஆரம்பத்தில் பிறந்ததாக கருதப்படும் இந்தக் கிளியின் உண்மையான வயது யாருக்குமே தெரியவில்லை. இருப்பினும் கிளி சரணாலயத்திற்கு வந்து சேர்ந்ததிலிருந்து கணக்கிடப்பட்டதின் அடிப்படையில் 100–வது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார்கள். இந்த அதிர்ஷ்டகார கிளிக்கு எலிசெபத் ராணியிடமிருந்தும் வாழ்த்து கடிதங்கள் கிடைத்திருக்கின்றன.
பொதுவாக ‘சல்பர் கிரஸ்டடு’ இனக் கிளிகள் 40 வயது வரை மட்டுமே வாழும் என்றாலும், பிரெட்டிற்கு அதிர்ஷ்ட காத்து அதிகமாக அடிக்கிறது போலும். அதான் 100–ஐ தாண்டியும் சுறுசுறுப்பாக சுற்றித் திரிகிறது.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.