Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 6, 2016

ஜெயலலிதாவை தோற்கடிக்கத் துடிக்கும் சுயேச்சை வேட்பாளர்!


தமிழக் முதல்வர் ஜெயலலிதாவை தோற்கடிப்பதே எனது குறிக்கோள் என்று ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் ஜெகதீஸ்வர ராவ் கூறினார்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுபவர் ஜெகதீஸ்வர ராவ். இவர், திருப்பதியில் செய்தியாளர்களை சந்தித்தபோது, ''ஜெயலலிதாவின் தீவிர தொண்டனான நான் திருப்பதியில் அவரது பிறந்த நாளின்போது கட் அவுட் வைத்தேன். அவர் சிறையில் இருந்தபோது, விடுதலையாக வேண்டி திருச்சானூரில் அங்கப்பிரதட்சணம், யாகம் எல்லாம் செய்தேன்.

ஆனால், அவர் தெலுங்கு மொழியை அவமதித்ததால் நான் அ.தி.மு.க.வில் இருந்து விலகினேன். தற்போது, ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறேன்.

தமிழகத்தில் தெலுங்கு மொழிக்கு அளித்து வந்த முக்கியத்துவத்தை முதல்வர் ஜெயலலிதா பறித்துவிட்டார். அவர் போட்டியிடும் ஆர்.கே. நகர் தொகுதியில் மட்டும் சுமார் 1.20 லட்சம் தெலுங்கர்கள் வசிக்கின்றனர்.

கருணாநிதி ஆட்சி காலத்தில் தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட்டது. ஆனாலும் தெலுங்கில் தேர்வு எழுத அனுமதியளிக்கப்பட்டது. ஆனால், ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தெலுங்கு மொழி முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது. தெலுங்கர்களின் மனதை நோகடித்த ஜெயலலிதாவை தோற்கடிப்பதே எனது குறிக்கோள். அதனால் ஆர்.கே.நகர் தொகுதியிலும், ஓசூரிலும் சுயேச்சையாக போட்டியிடுகிறேன்" என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.