ஐஎஸ் பயங்கரவாதத்தின் நீண்ட நிழல் யாஜிதிகளைத் துரத்திக்கொண்டே இருக்கிறது
யாஜிதிகளின் மரபுப்படி, மயில் தேவதூதன்தான் முதன்முதலாக பூமிக்கு வந்து, தனது இறகுகளின் வீச்சில் பூமியில் உள்ள எல்லா பொருட்களுக்கும் வண்ணம் தீட்டினானாம். வடக்கு இராக்கின் டோபுக் நகரத்தின் புறநகர்ப் பகுதியில், கனத்து இருண்ட வானத்தின் கீழ் முடிவே இல்லாததுபோல் பெய்துகொண்டிருக்கும் மழை, பழுப்பு நிறக் களிமண்ணில் கிளைப் பாதைகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. இங்கு மூன்று தலைமுறைகளாக இணைந்து வாழும் 15 பேர் கொண்ட யாஜிதி குடும்பம், உள்ளூர் கிறிஸ்தவர்கள் தங்களுக்கு வழங்கிய, கட்டி முடிக்கப்படாத கட்டிடம் ஒன்றில் தஞ்சமடைந்திருக்கிறது.
சின்ஜார் மலையடிவாரத்தில் உள்ள தங்கள் கிராமத்துக்குள், 2014 டிசம்பரில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு நுழைவதற்கு முன்னர், இந்தக் குடும்பத்தினர் தக்காளி வியாபாரம் செய்துவந்தார்கள். பல நூற்றாண்டுகளாக எந்த மாற்றத்தையும் அடையாத வாழ்க்கையை வாழ்ந்துவந்தார்கள். உலகத்துக்கு அவர்களுடன் செய்வதற்கு ஒன்றுமில்லை. அவர்களுக்கும் உலகத்துடன் எந்தத் தொடர்பும் இல்லை. அவர்கள் தங்களுக்கு வெளியில் திருமண பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ளவில்லை. வெளியாட்களும் அவர்களுடன் திருமண உறவைக் கொண்டிருக்கவில்லை. யாஜிதிகள் அப்படித்தான். ஆனால், இவர்களைத்தான் சாத்தானை வழிபடுபவர்கள் என்றனர் ஐஎஸ் பயங்கரவாதிகள்.
யாஜிதிகளை ஐஎஸ் அமைப்பு இனப்படுகொலை செய்தது என்று அமெரிக்க நாடாளுமன்றம் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால், இந்தக் குடும்பத்தைப் பொறுத்தவரை அவை வெற்றுச் சொற்கள்தான். தங்களைக் காப்பாற்றியது மேற்கத்திய நாடுகள் அல்ல; குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியின் ஆயுதப் பிரிவான பி.கே.கே.தான் என்கிறார்கள் இவர்கள். ஐஎஸ் பயங்கரவாதிகளிடமிருந்து தப்பி மலைப் பகுதிக்கு ஓடிவந்தபோது, பெண்களைத் தங்கள் முதுகில் சுமந்து சென்றதும், தங்களுக்கு ரொட்டியும் தண்ணீரும் அளித்ததும் பி.கே.கே. உறுப்பினர்கள்தான் என்கிறார்கள். மேற்குலகத்தைப் பொறுத்தவரை இந்த இடதுசாரி பி.கே.கே. இயக்கம் ஒரு பயங்கரவாத அமைப்பு. சமீபத்தில் துருக்கி தலைநகர் அங்காராவில் நடந்த குண்டுவெடிப்புக்குத் தாங்கள்தான் காரணம் என்று இந்த அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது. ஆனால், இந்த யாஜிதிகளைப் பொறுத்தவரை இடதுசாரி பி.கே.கே. அமைப்பினர்தான் தங்கள் நாயகர்கள். ஆபத்து இருள் சூழ்ந்தபோது தங்கள் கரங்களைப் பற்றிக் காப்பாற்றியதும் பாதுகாப்பான இடத்துக்குத் தங்களை அழைத்துச் சென்றதும் அவர்கள்தான் என்கிறார்கள்.
கொடூர மவுனம்
ஐஎஸ் கட்டுப்பாட்டில் இருந்த தங்கள் பகுதி தற்போது அதிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கும் நிலையில், யாஜிதிகள் அங்கு மீண்டும் திரும்புவார்களா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. யாஜிதிகளில் பலர், குறிப்பாக இளைஞர்கள், ஜெர்மனியில் தங்கள் புதிய வாழ்க்கையைத் தொடங்கியிருக்கிறார்கள். இந்தக் குடும்பத்தினரோ யாஜிதிகள் மீண்டும் சேர்ந்து ஒன்றாக வாழ வேண்டும் என்று விரும்புகிறார்கள். எனினும், அது அத்தனை பாதுகாப்பானது அல்ல என்பதையும் அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அருகில் வசிக்கும் அரபு சன்னி முஸ்லிம்களில் பலர் ஐஎஸ் அமைப்பினரின் வருகையை ஆதரித்தது ஒரு காரணம். யாஜிதிகளுடன் தினமும் காலை வணக்கத்தைப் பரிமாறிக்கொண்ட அதே மக்கள்தான், ஐஎஸ் அமைப்பினரால் யாஜிதி பெண்கள் இழுத்துச் செல்லப்பட்டு பாலியல் அடிமைகளாக விற்கப்பட்டபோதும், யாஜிதி குழந்தைகள் கொல்லப்பட்டபோதும் ஐஎஸ் அமைப்பின் பக்கம் நின்றார்கள்.
அக்குடும்பத்தின் தாய், தான் தப்பித்தபோது அணிந்திருந்த அதே உடையுடனே இருக்கிறார். அவரது நான்கு வயதுப் பேத்தி தனது முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் அவரைப் பார்த்துக்கொண்டிருக்கிறாள். இந்தச் சின்ன வயதிலேயே பல இன்னல்களை அவள் சந்தித்துவிட்டாள். அவளது தந்தை குர்து பேஷ்மெர்கா படையில் சேர்ந்துவிட்டதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஐஎஸ் படைகளை எதிர்த்து முன்னணியில் போரிடுபவர் அவர். ஐஎஸ் படையினர் சமீபத்தில் குளோரின் வாயுவைப் பயன்படுத்தி நடத்திய தாக்குதல் பற்றிப் பேசுகிறார். எனினும், தான் அஞ்சவில்லை என்கிறார் அவர். குர்து படையில் பணிபுரிவதன் மூலம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை 350 யூரோக்கள் அவருக்கு வழங்கப்படுகிறது. 15 பேர் கொண்ட இந்த யாஜிதி குடும்பத்தின் வாழ்வாதாரமாக அவர் இருக்கிறார்.
சூழ்ச்சிப் பொறிகள்
ஆயிரக்கணக்கான யாஜிதிகள் வடக்கு இராக்கில் உள்ள அகதி முகாம்களில் தஞ்சமடைந்திருக்கிறார்கள். மலை மீது உள்ள டவோதியா முகாமில் தங்கியிருக்கும் சில பெண்களுடன் இணைந்து, மதிய நேரத்தில் திறந்தவெளி அடுப்பு ஒன்றில் ரொட்டி தயாரிப்பதில் பங்கேற்றேன். கலாய்ஸில் உள்ள முகாம்களைவிட இது நிச்சயம் நல்ல முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் முகாம் என்றே சொல்ல வேண்டும். அதே சமயம், அவர்களின் சொந்த வீடுகளிலிருந்தும் பணிபுரியும் இடங்களிலிருந்தும் வெகுதொலைவில் இருக்கின்றன இந்த முகாம்கள்.
யாஜிதிகள் வசித்த இடங்களில் இன்றைக்கு ஐஎஸ் அமைப்பு ஆயிரக்கணக்கான கண்ணிவெடிகளைப் புதைத்துவைத்திருக்கிறது. யாஜிதிகள் வாழ்ந்த வீடுகள் முழுவதும் பல்வேறு விதங்களில் உருவாக்கப் பட்ட சூழ்ச்சிப் பொறிகளால் நிறைந்திருக்கின்றன. வீடு திரும்பும் குடும்பத்தின் குழந்தை, புதிய பரிசென்று கருதி மேஜையில் வயர்களுடன் பிணைத்து வைக்கப்பட் டிருக்கும் அலைபேசியைத் தொட்டால் அது வெடித்து விடும். நுண்ணலை அடுப்பின் கதவைத் திறந்தால் அது வெடிக்கும். குளிர்சாதனத்தை ஆன் செய்தால் அதுவும் வெடிக்கும். இராக்கின் பாத்திஸ்ட் ராணுவத்தில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்களைப் பணியமர்த்தியிருக்கிறது ஐஎஸ். சதாம் உசேன் காலத்தில் நிலத்துக்கு அடியில் கண்ணி வெடியைப் புதைத்துவைப்பதில் நீண்டகால அனுபவம் பெற்றவர்கள் பாத்திஸ்ட் படையினர். அவர்களைப் பயன்படுத்தி தொழில்முறை அனுபவத்துடனும் வியூகங்களுடனும் கண்ணி வெடிகளைப் புதைத்துவைத்திருக்கிறார்கள் ஐஎஸ் பயங்கரவாதிகள். இவ்வாறாக, ஐஎஸ் அமைப்பு தோற்கடிக்கப்பட்டாலும் பல ஆண்டுகள் கழித்தும் குழந்தைகளை அது கொன்றுகொண்டிருக்கும்.
அருகும் சாத்தியங்கள்
வடக்கு இராக் பகுதியில் ஐஎஸ் தோற்றுக்கொண்டிருக்கிறது என்பது ஒரு நல்ல செய்தி. இராக்கின் இரண்டாவது பெரிய நகரமான மோசுல், ஐஎஸ் படையிடமிருந்து விரைவில் விடுவிக்கப்படவிருக்கிறது. கெட்ட செய்தி என்னவென்றால், ஐஎஸ் அமைப்பை உருவாக்கிய சமூக சக்திகள் இன்னும் அப்படியேதான் இருக்கின்றன. ஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள இராக் அரசு மீதான அரபு சன்னி முஸ்லிம்களின் சீற்றம் இன்னும் குறையவில்லை. தங்கள் குறுங்குழுவாத போதனைகளுக்கு அப்பாற்பட்ட எவரையும் அல்லது எதையும் ஏற்காத சுதந்திர சன்னி முஸ்லிம்களின் மசூதிகள் இன்றும் இயங்குகின்றன. ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் காலம் முடிந்தாலும், மிக விரைவிலேயே அதுபோன்ற இன்னொரு அமைப்பு துளிர்த்துவிடும் என்பதுதான் இதன் அர்த்தம். அமெரிக்க நாடாளுமன்றத்தில் கற்பனை வாதங்கள் முன்வைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் யாஜிதிகள் தங்கள் வசிப்பிடங்களை விட்டு எங்கோ அலைந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் வீடு திரும்புவதற்கான வாய்ப்புகள், சாத்தியங்கள் அருகிக்கொண்டிருக்கின்றன.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.