Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 30, 2016

21 பந்துகளில் சதம்: கெயிலின் சாதனையை முறியடித்த இளம் வீரர்


குறைந்த பந்துகளில் சதமடித்த வீரர் என்ற கிறிஸ் கெயிலின் சாதனைனை 23 வயது இளம் வீரர் ஒருவர் முறியடித்துள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள் நாட்டைச் சேர்ந்த டிரினாட் டொபாக்கோ கிரிக்கெட் வாரியம் நடத்திய உள்ளூர் டி20 தொடரில், 23 வயதான இராக் தாமஸ், 21 பந்துகளில் சதமடித்து உலகச் சாதனை படைத்துள்ளார். அந்தத் தொடரில் ஸ்பேசைட் அணி நிர்ணயித்த 157 ரன்கள் இலக்கை வெறும் 8 ஓவர்களில் மேசன் ஹால் அணி சேஸ் செய்து மாபெரும் வெற்றி பெற்றது.

இதில், 31 பந்துகளைச் சந்தித்த இராக் தாமஸ் 14 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் உதவியுடன் ஆட்டமிழக்காமல் 131 ரன்கள் குவித்தார். இராக் தாமஸ், அதற்கு முந்தைய சார்லெட்வில்லி அணிக்கெதிரான போட்டியில் 57 பந்துகளில் 93 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

டி20 போட்டிகளில் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக 30 பந்துகளில் சதமடித்த கிறிஸ் கெயிலின் சாதனையே உலகச் சாதனையாக இருந்து வந்தது. அதேபோல் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணியின் டிவிலியர்ஸ் 31 பந்துகளில் சதமடித்து சாதனை படைத்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.