சீனாவில் உள்ள, யாங்கிட்சே என்ற நதி பாயும் பகுதிகளில், ஏராளமான தீவுக் கிராமங்கள் உள்ளன. இவற்றில், ஹயட்டோயு வான் என்ற குக்கிராமமும் ஒன்று. போதிய அடிப்படை வசதிகள் மற்றும் தொலை தொடர்பு வசதிகள் இல்லாததால், இங்கு வசித்தவர்கள், கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறி, வேறு பகுதிகளுக்கு சென்றதில், ஒட்டு மொத்த கிராமமே, 20 ஆண்டுகளுக்கு முன், காலியாகி விட்டது. இப்படி ஒரு கிராமம் இருந்ததே, சீனாவில் உள்ளவர்களுக்கு தெரியாமல் போய் விட்டது. இந்நிலையில், இக்கிராமத்தினர் சிலருக்கு தங்கள் சொந்த ஊர் ஞாபகம் வந்து, சமீபத்தில் அங்கு சென்றபோது, ஆச்சரியத்தில் உறைந்து விட்டனர்.
அங்கிருந்த வீடுகள், சாலைகள், சுவர்கள் மீதெல்லாம், விதம் விதமான செடிகள் பூத்து குலுங்கி, அழகான கிராமமாக மாறியிருந்தது. இதுகுறித்த தகவல் அறிந்ததும், சுற்றுலா பயணிகள் அந்த கிராமத்தை நோக்கி, படையெடுக்க துவங்கியுள்ளனர்.
அங்கிருந்த வீடுகள், சாலைகள், சுவர்கள் மீதெல்லாம், விதம் விதமான செடிகள் பூத்து குலுங்கி, அழகான கிராமமாக மாறியிருந்தது. இதுகுறித்த தகவல் அறிந்ததும், சுற்றுலா பயணிகள் அந்த கிராமத்தை நோக்கி, படையெடுக்க துவங்கியுள்ளனர்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.