Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 13, 2016

இந்தியாவின் முன்னணி 'பைக் வீராங்கனை' வேணு பாலிவால் விபத்தில் பலி!



நாட்டின் முன்னணி பெண் பைக் வீராங்கனையான வேணு பாலிவால், சாலை விபத்தில் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரசேத மாநிலம்,  விதிஸா மாவட்டத்தில் உள்ள கையாராஸ்பூரில் உள்ள சாலையில்,  வேணு பாலிவால் தனது 'ஹார்லி டேவிட்சன்' பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த பைக் , சாலையில் கவிழ்ந்து விழுந்தது.இதில் கீழே விழுந்து பலத்த காயமடைந்த வேணு, அருகே உள்ள  கையாராஸ்பூர் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில்   அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிக்சைக்காக விதிஸா மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

இந்தியாவின் முன்னனி மோட்டார் சைக்கிள் பந்தய வீராங்கனையான வேணு,  ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர், தனது ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிளில் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சாதனை படைத்தவர்  என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.