Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 17, 2016

நடிகைகளும் கிரிக்கெட் ஆடுகிறார்களா? - களைகட்டும் நட்சத்திர கிரிக்கெட்


நடிகர் சங்கம் நடத்தும் நட்சத்திரக் கிரிக்கெட் போட்டிகளுக்கு ஒரு பக்கம் ஆதரவுகளும், மறுபக்கம் எதிர்ப்புகளும் குவிந்துகொண்டே இருப்பினும், சங்கம் தன் கடமையை நிறைவேற்றும் பாணியில் டீம் கேப்டன்கள் மற்றும் டீம் வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

நடிகர் சங்க கிரிக்கெட் அணியில் இடம்பெறவிருக்கும் வீரர்,வீராங்கனைகளின் பட்டியல் இதோ

சென்னை சிங்கம்ஸ்:

கேப்டன் - சூர்யா

அணி வீரர்கள்: விக்ராந்த், நந்தா, உதய், அருண் விஜய், அர்ஜுன், ஹன்சிகா, கீர்த்தி சாவ்லா, கெளரி முங்கல், திவ்யா, ருக்மினி.

மதுரை காளைஸ்:

கேப்டன் - விஷால்

அணி வீரர்கள்: ரிஷி, சூரி, அருள்நிதி, ரமணா, ஆர்.கே. சுரேஷ், மன்சூர் அலிகான், ❣வரலட்சுமி, ஜனனி ஐயர், மதுமிதா, சாந்தினி, நிக்கி கல்ராணி

கோவை கிங்ஸ்:

கேப்டன் - கார்த்தி

அணி வீரர்கள்: பிரசாந்த், பரத், விஷ்ணு, சஞ்சய், மகேந்திரன், ஜே.கே. ரித்தீஷ், தமன்னா, மது ஷாலினி, ஸ்ருஷ்டி டாங்கே, மிஷா, அபிநயஸ்ரீ.

 நெல்லை டிராகன்ஸ்:

கேப்டன் - ஜெயம் ரவி

அணி வீரர்கள்: அரவிந்த் சாமி, விஜய் வசந்த், செளந்தர்ராஜா, பிரித்வி, அஸ்வின் சேகர், வைபவ், ஸ்ரீ திவ்யா, நமிதா, மனிஷா யாதவ், விஜயலட்சுமி, கோமல் சர்மா, பார்வதி.

ராம்நாடு ரைனோஸ்:

கேப்டன் - விஜய் சேதுபதி

அணி வீரர்கள்: ஜெய், கலை, போஸ் வெங்கட், வருண் ஈஸ்வரி கணேஷ், சக்தி, சிரிஷ், அருண் பாலாஜி, ரம்யா நம்பீசன், சோனியா அகர்வால், வசுந்தரா, காயத்ரி, ரித்விகா.

தஞ்சை வாரியர்ஸ்:

கேப்டன் - ஜீவா

அணி வீரர்கள்: அதர்வா, லக்‌ஷ்மண், பசுபதி, சரண், அசோக், பிளாக் பாண்டி, அமலா பால், தன்சிகா, நிகிஷா படேல், பிளோரா ஷைனி, சஞ்சனா சிங்

சேலம் சீட்டாஸ்:

கேப்டன் - ஆர்யா

அணி வீரர்கள்: கார்த்திக் முத்துராமன், உதயநிதி ஸ்டாலின், ஆதவ், உதயா, ஜித்தன் ரமேஷ், செந்தில், பிந்து மாதவி, நந்திதா, பூணம் கெளர், ரகசியா, சுஜா

திருச்சி டைகர்ஸ்:

கேப்டன் - சிவகார்த்திகேயன்

அணி வீரர்கள்: விக்ரம் பிரபு, அசோக் செல்வன், ஷாம், ஹேமசந்திரன், நிதின் சத்யா, சதீஷ், ஸ்ரீமன், கீர்த்தி சுரேஷ், சாயா சிங், காயத்ரி ரகுராம், தேஜாஸ்ரீ, வேதிகா

நட்சத்திர கிரிக்கெட் போட்டிகான  பெயர்களும், பட்டியலும் அறிவிக்கப்பட்ட உடனேயே ” உலகக் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக ஆண்களும், பெண்களும் இணைந்து விளையாடும் கிரிக்கெட் போட்டியாக இந்த நட்சத்திரக் கிரிக்கெட் போட்டியின் டீம்கள் அமைந்துள்ளன” என்று செய்திகள் பரவ ஆரம்பித்தன.

உடனே நடிகர்சங்கத்திடம் தொடர்புகொண்டு கேட்டதற்கு, “நடிகர்கள் மட்டுமே கிரிக்கெட் விளையாடுகிறார்கள், மற்றும் ஒவ்வொரு டீமிலும் நடிகைகளும் இருப்பார்கள்” என்றும் தெளிவுபடுத்தினர். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.