முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில், 'நேர்மை அணி' என்ற பெயரில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், 'ஓட்டுக்குப் பணம் கொடுக்க மாட்டேன்' என உறுதிமொழி எடுத்துக் கொண்டது தேர்தல் அதிகாரிகளை அசர வைத்தது.
ஆர்.கே.நகரில் முதல்வர் ஜெயலலிதா, தி.மு.கவின் சிம்லா முத்துச்சோழன் மற்றும் மக்கள் நலக் கூட்டணியின் சார்பில் முனைவர் வசந்திதேவி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இதனிடையே, கல்வியாளர்களும் ஓய்வுபெற்ற சில மூத்த அதிகாரிகளும் இணைந்து 'நேர்மை அணி' என்ற பெயரில் இந்த தேர்தலில் சில தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். ஊழல் ஒழிப்பும் மதுவிலக்கும் இந்த அணியின் பிரதான நோக்கங்கள்.
இந்நிலையில் நேற்று ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் வேட்புமனுத்தாக்கல் செய்தார் நேர்மை அணியின் வேட்பாளர் தங்கவேலு. மனுத்தாக்கல் செய்யும் நேரத்தில், தேர்தல் அதிகாரி ஒருவர் வேட்பாளரிடம் தாள் ஒன்றை நீட்டிவிட்டு, 'ஓட்டுக்குப் பணம் கொடுக்க மாட்டேன் என இதில் உறுதிமொழி இருக்கிறது. உங்களுக்கு விருப்பம் இருந்தால் படியுங்கள்' என்று சொல்ல, வேட்பாளரோ, 'அதை ஏன் தயங்கிட்டே சொல்றீங்க? எங்க கட்சியோட கொள்கையே அதுதான்' என்றபடி, தெருவில் போய் நின்று சத்தமாக படிக்க ஆரம்பித்துவிட்டார். வேட்பாளரின் அதிரடியைப் பார்த்து அசந்து போனார்கள் அதிகாரிகள்.
திருச்சி புத்தனாம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவராகவும் இருக்கும் தங்கவேலுவிடம் 'முதல்வரை எதிர்த்துப் போட்டியிடுவது ஏன்?' என கேட்டோம்.
"மக்கள் நலனை ஓர் அரசு விரும்பினால், வருவாய், வளம், சமூகநலன் போன்ற முக்கியமான மூன்று விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். இதில் அ.தி.மு.க அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை. உள்ளாட்சி அமைப்புகளுக்கு வீட்டு வரி, சொத்து வரி என்ற வகையில் தனியார் கல்வி நிறுவனங்கள் இரண்டாயிரம் கோடி ரூபாய் வரையில் பாக்கி வைத்துள்ளன. மணல் கொள்ளையில் மட்டும் ஆண்டுக்கு எட்டாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இரண்டு துறைகளில் மட்டுமே இப்படியென்றால், ஒட்டுமொத்த அரசுத் துறைகளிலும் பல லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. முதல்வரின் துறையிலேயே காலிப்பணியிடம் நிரப்பப்படுவதில்லை. இதுதொடர்பாக, உயர் நீதிமன்றத்தில் வழக்கும் போட்டிருக்கேன்.
'சட்டமன்றத்திலேயே மதுவிலக்கு சாத்தியமில்லை' என்று சொன்ன முதல்வர், 'இப்போது படிப்படியாக குறைப்பேன்' என்று சொல்வதில் இருந்தே தெரியவில்லையா? அவருக்கு மக்கள் மேல் எந்த அக்கறையும் இல்லையென்று. தி.மு.க, அ.தி.மு.க என காலம்காலமாக தொடர்ந்து வரும் மன்னராட்சி முறையை ஒழித்து, உண்மையான மக்களாட்சி மலர வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். மாற்றத்திற்கான நம்பிக்கை விதைகளைத் தூவுகிறோம். வெற்றி கிடைக்காவிட்டாலும், மக்களின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்திய திருப்தியே எங்களுக்குப் போதும்" என்றார் உணர்ச்சிப்பூர்வமாக.
நேர்மை அணியின் ஒருங்கிணைப்பாளர் செ.ம.அரசுவிடம் பேசினோம்.
" எங்கள் அணியின் சார்பில் 32 வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். ஊழல் ஒழிக்கப்படும், மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்ற என்ற முழக்கத்தோடு தேர்தலை சந்திக்கிறோம். வேட்புமனுத் தாக்கலின்போது, 'ஓட்டுக்குப் பணம் கொடுக்க மாட்டேன்' என்று அ.தி.மு.க, தி.மு.க உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் யாரும் உறுதிமொழி எடுத்ததாகத் தெரியவில்லை. எங்கள் வேட்பாளர்கள், பொதுவாழ்வில் தூய்மையாக இருப்பவர்கள். ஓட்டுக்குப் பணம் வாங்க மாட்டோம் என்பதில் புதிய வாக்காளர்கள் உறுதியாக இருக்கிறார்கள். இவர்கள்தான் இந்தத் தேர்தலில் மிக முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள். இந்த மாற்றமே எங்கள் அணிக்கான வெற்றியாக இருக்கும்" என்றார் நம்பிக்கையோடு.
செ.ம.அரசு உள்ளிட்ட நேர்மை அணியின் நிர்வாகிகள் பலர், அரசுத்துறையில் இறுதிவரையில் நேர்மையை கொள்கையாகக் கொண்டு வாழ்ந்தவர்கள். பல ஆண்டுகளாக ஊழல் ஒழிப்பு இயக்கத்தை முன்னெடுப்பவர்கள். 'ஓட்டுக்குப் பணம் கொடுக்க மாட்டோம்' என தெருவில் நின்று எழுப்பும் குரலுக்காகவே இந்த அணிக்கு ஒரு சபாஷ் போடலாம்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.