தேர்தலில் திருநங்கைகள் நிற்க தகுதியில்லை என்று கூறிய குஷ்புவை கண்டித்து அவர் தேர்தலில் எந்த தொகுதியில் நின்றாலும் எதிர்த்து போட்டியிடுவோம் என்று திருநங்கைகள் தெரிவித்துள்ளனர்.
விழுப்புரத்தில் மிஸ் கூவாகம் திருவிழா நடைபெறுவதையொட்டி விழுப்புரம் மாவட்ட திருநங்கைகள் நலச்சங்க தலைவர் ராதா, உள்ளிட்ட நிர்வாகிகள் கூட்டாக பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தனர். கூவாகம் திருவிழாவை காண பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான திருநங்கைகள் வருகிறார்கள். இவர்களை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. மிஸ் கூவாகம்-2016-க்கான அழகியை தேர்ந்தெடுக்க அழகி போட்டியும் நடத்த உள்ளோம்.
கூவாகம் திருவிழாவுக்கு போதுமான பாதுகாப்பு செய்துதரப்படவில்லை. கோவிலில் தங்க போதிய இடவசதி கிடையாது. தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் திருநங்கைகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளனர். இதனால் திருநங்கைகளுக்கான நலவாரியம் அமைக்கப்பட்டதன் மூலம் பல்வேறு திட்டங்கள் கிடைத்து வருகிறது. திருநங்கைகளுக்கான எந்த நலத்திட்டங்களையும் அரசியல் கட்சிகள் தங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாதது வேதனையளிக்கிறது.
சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு, தேர்தலில் போட்டியிட திருநங்கைகளுக்கு என்ன தகுதி இருக்கிறது. அவர்கள் தேர்தலில் போட்டியிட தகுதியில்லாதவர்கள் என எங்களைப் பற்றி இழிவாக பேசியுள்ளார். அவருக்கு எங்கள் கண்டனத்தை தெரிவிக்கும் விதமாக இந்த தேர்தலில் குஷ்பு எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து திருநங்கைகளாகிய எங்களில் ஒருவர் போட்டியிடுவார். வாய்ப்பு மறுக்கப்பட்டால் அவருக்கு எதிராக பிரசாரமாவது செய்வோம்” என்றனர்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.