Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 19, 2016

Wi-Fi வேகத்தை 2 மடங்கு அதிகரிக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த சென்னை பொறியாளர்!


இந்திய வம்சாவெளியை சேர்ந்த பொறியாளர் ஒருவர் வை-பை வேகத்தை இரு மடங்கு அதிகரிக்கும் புதிய வழிமுறையை கண்டறிந்திருக்கின்றார். இவரது புதிய தொழில்நுட்பம் எதிர்காலத்தில் தகவல் தொலைதொடர்பு முறையில் புதிய மைல் கல்லாக இருக்கும்.
கொலம்பியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த பொறியியல் மாணவரான ஹரிஷ் கிருஷ்னசுவாமி, சென்னை ஐஐடி’யில் மின்பொறியியல் மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிப் 
நான்-ரெசிப்ரோக்கல் சர்குலேட்டர் மற்றும் ஃபுல்-டூப்லெக்ஸ் ரேடியோவினை நானோஸ்கேல் சிலிகான் சிப் ஒன்றில் பொருத்தி புதிய திருப்புமுனை அமைப்பினை உருவாக்கியுள்ளார். 
 மாற்றம் 
‘இந்த புதிய தொழில்நுட்பம் தொலைதொடர்பு துறையில் புரட்சியை உண்டாக்கும்’ என கொலம்பியா ஹை-ஸ்பீடு மற்றும் எம்எம்-வேவ் ஐசி லேப் தலைவர் கிருஷ்னசுவாமி தெரிவித்துள்ளார். சிலிகான் சிப்’இல் பொருத்தப்பட்ட முதல் சர்குலேட்டர் இது தான் என்றும் அவர் கூறினார். 
 தகவல் பரிமாற்றம் 
ஃபுல்-டூப்லெக்ஸ் கம்யூனிகேஷன் முறையில் நானோ சிலிகான் சிப் மற்றும் ஒற்றை ஆன்டெனா பயன்படுத்தி வை-பை வேகத்தை இரு மடங்கு அதிகரிக்க முடியும் என்பதை சாத்தியமாக்கியுள்ளோம் என்றும் கிருஷ்னசுவாமி மேலும் தெரிவித்துள்ளார். 
 அரிய காரியம் 
‘ஒரே ஆய்வு அல்லது ஆய்வு குழுவின் மூலம் அடிப்படை கோட்பாட்டு பங்களிப்புகளை நடைமுறை தொடர்பைக் செயலாக்கங்களுக்கு ஏற்ப உருவாக்குவது மிகவும் அரிதான காரியம்’ என இந்திய ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பயன்பாடு 
தொடர்ந்து ஆய்வு பணிகளில் இருக்கும் இந்த தொழில்நுட்பம், மக்கள் பயன்பாட்டிற்கு வழங்குவது குறித்து எவ்வித தகவல்களும் தற்சமயம் வரை வழங்கப்படவில்லை. 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.