அனந்தபுரம் என்னும் கிராமத்தில் விவசாயி ஒருவன் இருந்தான். அவன் பெயர் உபேந்திரா. அவனிடம் நன்செய் நிலங் களும், புஞ்சய்நிலங்களும் இருந்தன. அந்த விவசாயி பாடுபட்டு உழைப்பவன். எதிலும் பதற்றம் கொள்ளமாட்டான். தோட்டத்தின் நடுவே இருந்த சொந்த வீட்டில் வசித்து வந்தான்.
ஒருநாள்-
ஒரு மனிதன் அவனிடம் வந்து, ""உபேந்திரா! உன் வயலில் அடுத்த வீட்டுக் காரனுடைய மாடு மேய்கிறது,'' என்று சொன்னான்.
""ஏதோ தற்செயலாய் வயலுக்குள் புகுந்து மேய்ந்திருக்கும் பரவாயில்லை,'' என்று சொன்னான் உபேந்திரா.
மறுநாள் இன்னொருவன் ஓடி வந்து, ""உபேந்திரா! உன் வயலிலுள்ள கதிர்களை அண்டை வீட்டுக்காரன் அறுத்துக் கொண்டிருக்கிறான்,'' என்று சொன்னான்.
""போனால் போகிறது. அவன் வயலில் இந்த வருடம் போதிய விளைச்சல் இல்லை. அதனால்தான் என் வயல் நெல்லை அவன் அறுத்துக்கொள்கிறான் போலும்,'' என்று பதில் சொன்னான் உபேந்திரா.
உபேந்திரா அப்பாவியாக இருப்பதால், ஊக்கமுற்ற அண்டை வீட்டுக்காரன், அத்துமீறி நடக்கத் தொடங்கினான்.
உபேந்திரா வீட்டுத் தோட்டத் தில் மா மரம் ஒன்று இருந்தது. அந்த மரத்தின் மீது உபேந்திரா உயிரையே வைத்திருந்தான். அந்த மரத்தின் இரண்டொரு கிளைகள், அடுத்த வீட்டுக்காரன் தோட்டம் வரை நீண்டு வளர்ந்திருந்தன.
அந்த இரு கிளைகளையும் உபேந்திராவிடம் எதுவும் சொல்லாமல், அண்டை வீட்டுக் காரன் வெட்டிவிட்டான்.
இந்த அநியாயத்தை பொறுக்க முடியாத உபேந்திரா அவனிடம் சென்று, ""மா மரத்தின் கிளைகளை நீ ஏன் வெட்டி எறிந்தாய்? என்னிடம் ஒரு வார்த்தை சொல்லி இருக்கக் கூடாதா?'' என்று கோபமாக கேட்டான்.
""நான் எதற்கு உன்னிடம் சொல்ல வேண்டும்? கிளை களை வெட்டியதற்கு நீ அல்லவா எனக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்?'' என்று துணிச்சலுடன் சொன்னான் அண்டை வீட்டுக்காரன்.
""என் மரத்துக் கிளைகளை நீ வெட்டி எறிந்ததற்கு நான் நன்றி தெரிவிக்க வேண்டுமா? தப்புச் செய்து விட்டு, தலை மீது வேறு ஏறுகிறயே?''என்று கேட்டான் உபேந்திரா.
""என்னையா தப்பு செய்தவன் என்று சொல்லுகிறாய்? நீ அல்லவா தப்பு செய்தவன்? மாமரத்தை என் தோட்டத்து அருகே நீ வைத்ததால், அதன் வேர்கள் என் தோட்டத்துக்குப் பரவி அங்கே இருக்கும் பயிர், பச்சைகளை வளரவிடாமல் தடுக் கின்றன. இது தப்பு என்று உன் மூளையில் படவில்லையா?'' என்று கேட்டான் அண்டை வீட்டுக்காரன்.
அப்பாவி உபேந்திராவுக்கு ஒன்றும் பதில் சொல்லத் தோன்றவில்லை. சிறிது நேரம் சும்மா நின்றுவிட்டு, ""தப்பு என்னுடையது தான். இதில் சந்தேகம் இல்லை. நீ பெரிய அடாவடிக்காரன் என்பது தெரிந்தும் உனக்கு அண்டை வீட்டுக்கார னாக நான் இருக்கிறேன். அது என் மீதுள்ள பெரிய தப்பு தான்!'' என்று சொல்லிவிட்டு, தன் வீட்டுக்குத் திரும்பினான் உபேந்திரா.
அயோக்கியனுக்கு இடம் கொடுத்தால், அவன் அத்துமீறி நடப்பான். அத்துமீறி நடப்பவனை ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும். இல்லையேல், அவனை அடக்கிக் கட்டுப்படுத்துவது கடினம் என்பதை, "லேட்டாக' புரிந்து கொண்டான் உபேந்திரா.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.