Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 19, 2016

'வருத்தப்படுவதை நிறுத்துங்க டே...!'- போட்டியிடாதது குறித்து எம்.எல்.ஏ.பாலபாரதி விளக்கம்!


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சட்டமன்றத் தேர்தலில் எம்.எல்.ஏ. பாலபாரதி மீண்டும் போட்டியிடாதது குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக  கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றியுள்ளார் பாலபாரதி. திண்டுக்கல் தொகுதியில் இருந்து தொடர்ந்து 3 முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட்டார்  என்பது குறிப்பிடத்தக்கது. '

அக்கட்சியை பொறுத்தவரை ஒருவர் இரண்டு முறை மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும். இந்நிலையில் கடந்த தேர்தலில், அவர்  மக்கள் செல்வாக்கு மிகுந்தவர் என்பதால், 3 ம் முறையாக 'சீட்' வழங்கப்பட்டது என்றும்,  இந்த முறை அவ்வாறு சிறப்பு ஒதுக்கீடு செய்ய முடியாது என்றும், அதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விதிமுறைகள் இடம் தராது என்றும் அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.  

ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் எம்.எல்.ஏ.பாலபாரதி மீண்டும் போட்டியிடாதது  குறித்து பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு இருக்கின்றன.

இதற்கு அவர் பதிலளிக்கும் விதமாக  அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ' வருத்தப்படுவதை நிறுத்துங்க டே, ஏதோ இரங்கல் கூட்டத்திலிருப்பதைப்போல் இருக்கிறது. நானும் இருந்து எடுத்த முடிவு டே' என்று குறிப்பிட்டுள்ளார்.  

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.