முன்னொரு காலத்தில் நாகரிகமே அறியாத சிற்றூர் ஒன்றில் இளைஞன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் பெயர் சின்னா. மாலை நேரம் வந்து சிறிது இருட்டி விட்டால் போதும், அந்த ஊரில் உள்ள எல்லாரும் தூங்கி விடுவர். இருட்டில் வெளிச்சத்தை உண்டாக்க விளக்கு என்ற ஒன்று இருப்பதே அவர்களுக்குத் தெரியாது.
பல ஆண்டுகளுக்கு முன்னரே வேற்றூர் சென்று விட்ட தன் நண்பனைக் காண நினைத்தான் சின்னா. பல நாட்கள் பயணம் செய்து நண்பனின் ஊரை அடைந்தான். நண்பனும் இவனை வரவேற்றான். இரவு நேரம் வந்தது. வீடு முழுவதும் வெளிச்சம் தந்து கொண்டிருந்த விளக்கை, வியப்புடன் பார்த்தான் சின்னா.
தன் நண்பனிடம், ""அறை முழுவதும் நல்ல வெளிச்சம் தருகிறது. இது போன்ற ஒன்றை நான் இது வரையில் பார்த்ததே இல்லை. இதன் பெயர் என்ன?'' என்று கேட்டான் சின்னா.
கேலி செய்ய நினைத்த நண்பன், "இதுவா இது சூரியனின் குஞ்சு. இங்கிருந்து நீண்ட தூரமுள்ள தீவுகளில் இதைப் போன்ற சூரியன் குஞ்சுகள் ஏராளமாக உள்ளன. யார் அங்கு சென்றாலும் இதைப் போன்ற ஒன்றைப் பிடித்து வரலாம். நானும் அப்படித்தான் பிடித்து வந்தேன். இந்த ஊரிலுள்ள எல்லார் வீட்டிலும் இதைப் போன்ற சூரியன் குஞ்சு உள்ளது,'' என்று அளந்தான்.
அதை உண்மை என்று நம்பிய சின்னா ஊருக்குச் செல்லும்போது எப்படியாவது அந்தச் சூரியனின் குஞ்சை திருடிச் செல்ல வேண்டுமென்று நினைத்தான்.
நள்ளிரவு நேரம். விழித்த சின்னா நண்பன் நன்றாக உறங்குவதை அறிந்தான். எரிந்து கொண்டிருந்த அந்த விளக்கை எடுத்து வீட்டுக் கூரையில் மறைத்து வைத்தான்.
சிறிது நேரத்தில் வீடே தீப்பிடித்துக் கொண்டது. விழித்த நண்பன் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தான்.
வீடு முழுவதும் எரிந்து சாம்பல் ஆயிற்று. தீயில் எரிந்து போகாத பொருள்கள் ஏதேனும் கிடைக்குமா என்ற எண்ணத்தில் அந்தச் சாம்பலைக் கிளறித் தேடினான் சின்னாவின் நண்பன்.
இவனும் சும்மா இராமல் சாம்பலைக் கிளறினான்.
""நீ என்ன தேடுகிறாய்?'' என்று எரிச்சல்பட்டான் நண்பன்.
"'ஊருக்குச் செல்லும்போது எடுத்துச் செல்லலாம் என்ற எண்ணத்தில் சூரியன் குஞ்சை வீட்டுக் கூரையில் ஒளித்து வைத்தேன். அதைத் தான் தேடுகிறேன்,'' என்று சொன்னான் சின்னா.
வீடு எரிந்து சாம்பலானதற்கு காரணம் இப்போது நண்பனுக்குப் புரிந்தது. முட்டாளான இவனோடு விளையாடியதற்காக தன் தலை விதியை நொந்து கொண்டான் நண்பன்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.