கோவை மாவட்டத்தில் மூட்டை மூட்டையாகப் பிடிபட்ட தங்க மூக்குத்திகளின் ரகசியம் பற்றிதான் எங்கும் பேச்சாக உள்ளது. ' குறைந்தஅளவு மூக்குத்தி, கம்மல்களை மட்டுமே அதிகாரிகள் கணக்கு காட்டியுள்ளனர்' என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.
தங்க நகைகள் தயாரிப்பில் கொடிகட்டிப் பறக்கும் கோவை ஒப்பணக்கார வீதியில், வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக தங்க மூக்குத்திகள் தயார் செய்யப்படுவதாக தகவல்கள் வந்ததையடுத்து, அதிகாரிகள் ரெய்டுக்குக் கிளம்பினர். மூக்குத்தி முரளி என்பவர் கடையில் பதினொன்றரை கிலோ தங்க மூக்குத்தி, கம்மல் பிடிபட்டதாகவும், இதன்மதிப்பு இரண்டரை கோடி ரூபாய் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுபற்றி நம்மிடம் பேசிய அரசியல் கட்சிப் பிரமுகர் ஒருவர், " கடந்த தேர்தலிலும் இதே முரளிதான் வாக்காளர்களுக்கு விநியோகிக்க மூக்குத்தி தயாரித்துக் கொடுத்தார். இப்போது பிடிபட்ட மூக்குத்திகள் பற்றி குறைவான கணக்கையே காட்டியுள்ளனர். ஒரு கிராம், இரண்டு கிராம் அளவில் மூக்குத்தி, கம்மல் ஆகியவற்றைத் தயாரிக்கும் வேலைகள் சில வாரங்களாக நடந்து வந்துள்ளது. அவரிடம் இருந்து பத்து மூட்டை மூக்குத்திகள் கைப்பற்றப்பட்டன. இவற்றின் மதிப்பு பதினைந்து கோடியைத் தாண்டும் என நகை வியாபாரிகளே சொல்கின்றனர். ஆனால், அதிகாரிகள் குறைவான கணக்கையே காட்டியுள்ளனர். இவை அனைத்தும் ஆளுங்கட்சியின் கலை, இலக்கிய அணியின் பிரமுகர் ஒருவரின் மேற்பார்வையில் தயாரிக்கப்பட்டவை.
ஆனால், நகையின் உண்மையான மதிப்பீட்டைச் சொன்னால் தேவையற்ற பிரச்னைகள் வரும் என்பதால் மறைக்கின்றனர். கோவை மாவட்டத்தில் உள்ள பத்து தொகுதிகளும் ஆளுங்கட்சிக்கு சாதகமாக இல்லை என்பதால், விதம்விதமான பரிசுப் பொருட்களைக் கொடுத்து கவர நினைக்கின்றனர். மூக்குத்தி முரளியிடம் சரியான விசாரணை நடத்தினால் அனைத்து தகவல்களும் அம்பலமாகும். இதுதவிர, ஜவுளிக் கடைகளில் ஆயிரம் ரூபாய் மதிப்பில் துணி வாங்க டோக்கன் கொடுக்கின்றனர். துணி வாங்க விருப்பமில்லாவிட்டால் பணமாக வாங்கிக் கொள்ளலாம். இதற்கான பணம். முக்கியப் பிரமுகர் மூலம் செட்டில் செய்யப்படுகிறது.
இதைவிடக் கொடுமை, தொகுதியில் உள்ள வாக்காளர்களின் எண்களுக்கு மூன்று முறை தொடர்பு கொண்டு பேசுகின்றனர். அவர் ஆளுங்கட்சிக்கு ஆதரவான வாக்காளர்தான் என்று உறுதிப்படுத்தியவுடன், முதல்கட்டமாக, 250, 500, 1000 ரூபாய் என தொகுதிக்கு ஏற்ற வகையில் விநியோகிக்கவும் ஆரம்பித்துவிட்டனர். அண்மையில் ஆளுங்கட்சிக்கு ஆதரவான அதிகாரிகளை தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்தது. ஆனால், கோவையில் கலெக்டர் உள்பட வருவாய்த்துறையின் முக்கிய அதிகாரிகள் ஒருவரையும் மாற்றவில்லை. இவர்களிடம் இருந்து எந்த தகவலையும் வாங்க முடிவதில்லை" என வேதனைப்பட்டார்.
தேர்தல் முடிவதற்குள் வாக்காளர்களை குளிர்விக்க இன்னும் என்னென்ன வித்தைகளை அவிழ்க்கப் போகிறார்களோ?

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.