‘‘டேய் கண்ணா எழுந்திரிடா... ஸ்கூலுக்கு போக வேண்டாமா...? டைம் ஆயிடுச்சு...’’, ‘’அம்மா இன்னும் ஒரு 10 நிமிஷம்....’’ பெரும்பாலான வீடுகளில் காலை நேரத்தில் தாய்க்கும், குழந்தைக்கும் இடையே நடக்கும் இந்த உரையாடல் சகஜம் தான். படுக்கையில் இருந்து குழந்தைகளை எழுப்ப, தாய் படும்பாடு சற்று சிரமம் என்றால் அது மிகையாகாது. டெல்லியில் பள்ளி செல்லும் இளசுகள், இரவு நீண்டநேரம் விழிப்பதால் காலையில் சீக்கிரமாக தூக்கத்தில் இருந்து எழ முடியாமல் தவித்து வருவதாகக் கூறுகிறது சமீபத்திய ஆய்வு. அதுவும் பள்ளி மாணவர்கள் பெரும்பாலோர், ஒரு நாளைக்கு 5 மணி நேரம் மட்டுமே தூங்குவது ஆய்வில் தெரியவந்துள்ளது. டெல்லியில் செயல்பட்டு வரும் போர்டிஸ் ஹெல்த்கேரின் மனநலம் மற்றும் நடத்தை அறிவியல் துறை சார்பில் சமீபத்தில் பள்ளி செல்லும் மாணவர்கள் 550 பேரிடம் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. மாணவர்கள் தூங்கும் முறை குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.
இதில் இரவு நீண்ட நேரம் தூங்காமல் இன்டர்நெட்டில் சேட்டிங் செய்வது, செல்போனை நோண்டுவது, தூக்கத்தின் நடுவே எழுந்து பேஸ்புக், வாட்ஸ் அப்பில் நேரத்தை போக்குவது, சினிமா பார்ப்பதாக கூறியுள்ளனர் பள்ளி செல்லும் இளசுகள். இதுபோன்று இரவு நேரத்தில் தூங்காமல், காலையில் தாமதமாக எழுவதால் உடல்நலம் மட்டுமின்றி, மனநலமும் பாதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது ஆய்வு. இது குறித்து டாக்டர்கள் கூறியதாவது: நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில், பெரும்பாலான மாணவர்கள் காலையில் எழும் முன் பெரும் சிரமத்தை சந்திப்பது தெரியவந்துள்ளது. தங்களது உடலுக்கு தினமும் 7 முதல் 9 மணி நேரம் ஓய்வு வேண்டும் என்பது நன்கு தெரிந்தும், வேண்டுமென்றே அதை செய்யாமல் நீண்ட நேரம் இரவில் கண்விழிக்கின்றனர். நிம்மதியான உறக்கம் தான் நல்ல உடல் மற்றும் மனநலத்துக்கு வழிவகுக்கும்.
பள்ளி செல்லும் பெரும்பாலான மாணவர்கள், தினமும் 5 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்குவதாக தெரிவிக்கின்றனர். படுக்கை அறையில் செல்போனை நீண்ட நேரம் பார்த்து கொண்டிருப்பது, டிவி பார்ப்பது, லேப்டாப் பயன்படுத்துவது, ஹெட்போனுடன் தூங்குவது போன்ற செயல்பாடுகள் தூக்கத்துக்கு பிரச்னையாக உள்ளன. அதனால் தான் பெரும்பாலான மாணவர்களுக்கு காலையில் சீக்கிரமாக எழுவது பெரும் தடைக்கல்லாக உள்ளது. இவ்வாறு டாக்டர்கள் கூறினர். செல்போன், இன்டர்நெட், சமூக வலைதளங்களை இரவு நேரங்களில் பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு, நன்றாக தூங்க வேண்டும் என்று பள்ளி மாணவர்களுக்கு டாக்டர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். எப்படியோ, ‘எதையும் முடிக்கும் திறமை உன்னில் கண்டேன், உன்னால் முடியும் தம்பி... தம்பி...’ என்ற சினிமா பாடல் வரியின் கருத்தை, பள்ளி மாணவர்கள் உண்மையாக்கினால் சரி.
‘இப்பவே கண்ணை கட்டுதே’
இரவு சரியாக தூங்காததால், பெரும்பாலான மாணவர்கள் சோம்பலுடன் பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. என்ன தான் ஆசிரியர் சத்தம் போட்டு பாடம் நடத்தினாலும், பாடத்தை கவனிக்க அக்கறை வருவதில்லை எனவும், வகுப்பறையில் தூக்கம் வருவதாகவும் ஆய்வில் பங்கேற்ற மாணவர்கள் கூறியுள்ளனர். சரியான தூக்கம் இல்லாமல், வகுப்பறையில் தூங்கி வழிவதால் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது. அத்துடன், இரவு நீண்ட நேரம் விழிப்பதால் உடல்நலமும் பாதிக்கப்படும் அபாயம் உருவாகும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.