'இங்க என்ன சொல்லுது.. பணம் வேணாம் வேணாம்னு சொல்லுதா?' என திரைப்பட பாணியில் ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள் என்று தேர்தல் ஆணையம் தீவிர பிரசாரம் செய்து வருகிறது.
இந்த தேர்தலில், அரசியல் கட்சிகளின் பிரசாரத்தைவிட தேர்தல் கமிஷனின் பிரசாரம் கொஞ்சம் அதிகமாகவே தான் இருக்கிறது. 100 சதவீத வாக்குப்பதிவிற்காகவும், மக்கள் பணம் வாங்கி கொண்டு ஓட்டு போடக்கூடாது என்பதற்காகவும் தேர்தல் கமிஷன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. இதற்காக அனைத்து இடங்களிலும் பல்வேறு வாசகங்கள் அடங்கிய விளம்பர பலகைகளையும் தேர்தல் ஆணையம் வைத்துள்ளது.

மேலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு நாடகங்களையும், சமூக வலைதளங்களிலும் தீவிர பிரசாரம் செய்து வருகிறது. அந்த வரிசையில், தனது முகநூல் பக்கத்தில் தினம், தினம் புதிய வாசகங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக நடிகர் ரஜினிகாந்தின் 'பஞ்ச்' டையலாக்குகளை அப்படியே மாற்றம் செய்தும் வெளியிடுகிறது.
ரஜினி நடித்து வெளிவந்த 'முத்து' திரைப்படத்தில், 'நான் எப்ப வருவேன், எப்படி வருவேனு யாருக்கும் தெரியாது. ஆனா வரவேண்டிய நேரத்தில் கரெக்டா வருவேன்' என்று ஸ்டைலாக பேசுவார். அந்த வசனத்தை தேர்தல் கமிஷன், பணத்தை உங்களுக்கு 'எப்ப தருவாங்க, எப்படி தருவாங்கனு யாருக்கும் தெரியாது? ஆனா தரும்போது வாங்காதீங்க!' என்று மாற்றி அமைத்திருக்கிறது.
அதேபோல் ரஜினி, பாட்ஷா திரைப்படத்தில் 'நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி' என்பார். அந்த வசனத்தை, 'ஒரு தடவ நீங்க வாங்குனா, அஞ்சு வருஷத்துக்கு ஏமாந்த மாதிரி' என்று மாற்றப்பட்டுள்ளது. இது தவிர ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது என்பதனை வலியுறுத்தியும் தேர்தல் ஆணையம் பல வாசகங்களை வெளியிட்டுள்ளது.
அதில் சில...
'நோட்டுக்கு வோட்டு, நாட்டுக்கு வேட்டு'
'100 சதவீதம் ஒட்டு போட்டா சரித்தரம், போடலேனா நாட்டுக்கே தரித்திரம்'
'மத்த நாட்டில் எல்லாம் கடமையை மீறுவதற்கு பணம். நம்ம நாட்டுல தான் கடமையை செய்வதற்கு பணம்'
'நம் சமுதாய மாற்றம் நம் விரலில்'
'காசு, பணம், துட்டு ஒழி! ஒழி!'
'ஒரு தடவ முடிவு பண்ணிட்டா... மத்தவங்க பேச்சை கேட்காதீங்க'
'பணம் வாங்காம ஓட்டு போடுங்க...'
'காசு, ஆடம்பரம்... வோட்டு அத்தியாவசியம்'
'வாங்காதே தம்பி வாங்கதே! நீ வாங்கிய பிறகு ஏங்காதே!'
'இங்க என்ன சொல்லுது.. பணம் வேணாம் வேணாம்னு சொல்லுதா?'
''கடமையை செய்ய பணத்தை எதிர்பார்க்காதே!'
'என் வாக்கு விற்பனைக்கு அல்ல'

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.