தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான வாட்ச்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் தீவிர வாகன சோதனை நடத்தி, முறையான ஆவணம் இன்றி கொண்டு செல்லப்படும் பணம், நகைகளை பறிமுதல் செய்து வருகின்றனர். அதன்படி, பெரம்பூர் தொகுதி பறக்கும் படை அதிகாரி தணிகாசலம் தலைமையில் போலீசார் நேற்று காலை வியாசர்பாடி கணேசபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கொளத்தூரில் இருந்து சவுகார்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்த மினிவேனை தேர்தல் அதிகாரிகள் மடக்கி சோதனை செய்தனர்.
அதில் 20 அட்டை பெட்டிகள் இருந்தது. அவற்றை அதிகாரிகள் பிரித்து பார்த்தபோது, ஒரு பெட்டியில் 100 வாட்ச்கள் வீதம் மொத்தம் 2000 விலை உயர்ந்த வாட்ச்கள் இருந்தன. இதன் மொத்த மதிப்பு ₹5 லட்சம். ஆனால் இதில் ரூ.1லட்சம் மதிப்பிலான 100 வாட்ச்களுக்கு மட்டுமே ஆவணங்களில் கணக்கு இருந்தது. இதையடுத்து, அதிகாரிகள் வாட்ச்களை பறிமுதல் செய்து பெரம்பூர் தாசில்தார் கருவூலத்தில் ஒப்படைத்தனர். இதுசம்பந்தமாக சவுகார்பேட்டையை சேர்ந்த வியாபாரி மோட்டார் ராம் (43) என்பவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.