Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 22, 2016

மலைக்க வைத்த காசு குவியல்... சுயேட்சை வேட்பாளரால் திகைத்து நின்ற தேர்தல் அதிகாரி!


வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் கந்தசாமி என்பவர், இன்று தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது, தான் கொண்டு வந்த 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சில்லரை மூட்டையை வழங்கி பரபரப்பை ஏற்படுத்தினார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் மே 16ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இன்று வேட்பு மனுத் தாக்கல் தொடங்கியது. வேட்பு மனுத் தாக்கல் செய்ய, வரும் 29ம் தேதி கடைசி நாளாகும். முதல் நாளான இன்று பல்வேறு தொகுதிகளில் போட்டியிடும் சுயேட்சை மற்றும் கட்சி வேட்பாளர்கள் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளனர்.

இந்த நிலையில், சென்னை வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியில் எஸ்.விகடகவி (எ) கந்தசாமி என்பவர் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இவர் இன்று காலை தனது ஆதரவாளர்களுடன் வில்லிவாக்கம் தொகுதிக்கு உட்பட்ட செனாய்நகரில் உள்ள தேர்தல் அலுவலகத்திற்கு வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார். அப்போது, கையில் சிவப்பு கலர் மூட்டையுடன் அலுவலகத்தின் உள்ளே நுழைந்தார். இதனை பார்த்த அங்கிருந்த அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கந்தசாமி மூட்டையை அவிழ்த்து தேர்தல் அதிகாரி குமரவேல்பாண்டி மேஜையின் மீது சில்லரை காசுகளை கொட்டினார். இதை பார்த்து தேர்தல் அதிகாரி அதிர்ச்சி அடைந்தார். 'இதில் 10 ரூபாய்  நாணயங்கள் என 10 ஆயிரம் ரூபாய் இருக்கிறது' என கூறிய கந்தசாமி, தனது வேட்பு மனுவை தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்தார். இந்த சில்லரை காசுகளை அங்கிருந்த அரசு ஊழியர்கள் எண்ணினர். 10 ஆயிரம் ரூபாய் இருப்பதாக அவர்கள் உறுதிப்படுத்தினர்.

சுயேட்சை வேட்பாளர் ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்ய, சில்லரை மூட்டையுடன் வந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
 

தேனி மாவட்டம், கம்பம் சட்டமன்ற தொகுதி எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் எஸ்.எம். ரபீக் அகமது, தமது கட்சியினர் 100 பேருடன் ஊர்வலமாக வந்து உத்தமபாளையம் கோட்டாட்சியரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதியை குறிவைத்து கடந்த ஐந்தாண்டுகளாக தேர்தலுக்கான வேலையை பார்த்து வந்தவர் முத்துச்சாமி. இவர் மாவட்ட செயலாளர் என்றாலும் சமீபத்தில் கட்சியில் ஐக்கியமான ம.தே.மு.தி.க சந்திரகுமாருக்கு அந்த தொகுதியை தாரைவார்க்க ஒட்டுமொத்த தி.மு.க.வினரும் அதிருப்தியில் இருந்தனர். இந்த நிலையில் மேற்கு தொகுதியை முத்துச்சாமிக்கு ஒதுக்கியது தி.மு.க தலைமை.

இந்த நிலையில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார் முத்துச்சாமி. இன்று காலை 10.30 மணி முதல் 12 மணி வரை ராகுகாலம் என்பதால் 12.10 மணிக்கு வீட்டைவிட்டு கிளம்பிய முத்துச்சாமி 12.30 மணிக்கு ஈரோடு கோட்டாட்சியர் அலுவலகம் வந்து சேர்ந்தார். ஜெயலலிதா வெயிலில் பிரசாரம் செய்வதால் தான் மரணங்கள் நிகழ்கிறது என தி.மு.க தலைவர்களின் பிரசாரம் ஒருபக்கம் ஓடிக்கொண்டிருக்க இவருடன் வந்தவர்கள் வெயிலில் முத்துச்சாமிக்காக காத்துக் கொண்டிருந்தனர்.

வேட்புமனு முடிந்ததும் பத்திரிகையாளர்களிடம் பேசிய முத்துசாமி, கடந்த ஒருவாரமாக தொகுதி முழுவதும் சுற்றி வருகிறோம். குடும்ப செலவுகளை குறைக்க வேண்டும். அதனால் கலைஞர் முதல்வராக வரவேண்டும் என மக்கள் கூறுகிறார்கள். வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறாமல் தேர்தல் வேலை செய்து வெற்றி பெறுவோம்" என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.