Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 25, 2016

விஜயதாரணிக்கு எதிர்ப்பு: விளவங்கோடு காங்கிரசார் டெல்லியில் உண்ணாவிரதம்!


 விளவங்கோடு வேட்பாளராக விஜயதாரணியை அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த தொகுதி காங்கிரசார் டெல்லியில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

அடுத்த மாதம் (மே) 16-ம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து, தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, வேட்பாளர்கள் அறிவிப்பு வெளியானதிலிருந்து அ.தி.மு.க., தி.மு.க உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி உறுப்பினர்கள், தங்கள் பகுதி வேட்பாளர்களை மாற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் சார்பில் விளவங்கோடு தொகுதிக்கு விஜயதாரணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார். இவருக்கும் தற்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது. விஜயதாரணியை மாற்றக்கோரி விளவங்கோடு தொகுதி காங்கிரசார் இன்று (24-ம் தேதி) டெல்லியில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விஜயதாரணி கடந்த 5 ஆண்டுகளாக தொகுதி பக்கமே வரவில்லை எனவும் அவர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.