Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 27, 2016

விஜயகாந்தும் அந்த 2 இம்சை அரசர்களும்!


கருணாநிதி, ஜெயலலிதா இரண்டு பேரும் போட்டி போட்டு தனக்கு இம்சை கொடுப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும்,  தே.மு.தி.க.-த.மா.கா.-மக்கள் நலக்கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலந்துகொண்டு, கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகையில், சமீபத்தில் தேர்தல் கமிஷனால் 18 அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டார்கள். அதிகாரிகள் மாற்றம் என்றால் என்ன? என்னை பொறுத்தமட்டில் அதிகாரிகள் தவறு செய்தால் வேலை நீக்கம் செய்ய வேண்டும். அப்போது தான் பயம் இருக்கும்.

மக்களுக்கு அதிகாரிகள் துரோகம் செய்யமாட்டார்கள். எல்லா தேர்தலிலும் முல்லைப்பெரியாறு அணையை பற்றித்தான் பேசுகிறார்கள். முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தியது நாங்கள் தான் என்று தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கூறுகிறார்கள். நான் சுருக்கமாக முடிவு சொல்லட்டுமா. நானே முதலமைச்சராக இருந்தாலும், யார் முதலமைச்சராக இருந்தாலும், நீதிமன்றம் என்ன முடிவு சொல்கிறதோ அதன்படி தான் நடக்க வேண்டும். நீதிமன்றம் முடிவு சொல்லும்போது யாராக இருந்தாலும் அப்படித்தானே போக வேண்டும்.

ஜெயலலிதா என்ன சொன்னார்? தமிழகத்தை மின்சார தங்கு தடையின்றி மின்மிகை மாநிலமாக மாற்றுவேன் என்றார். மின்மிகை மாநிலமாக மாற்றிவிட்டாரா?. நான் இங்கு பேசி முடித்துவிட்டு மதுரைக்கு செல்ல வேண்டும். அதனால் அதிக நேரம் பேச முடியாது. ஏனெனில் கடந்த தேர்தலின் போது நான் 10 நிமிடம் அதிகமாக பேசிவிட்டேன் என்பதற்காக கருணாநிதி என்னை நீதிமன்றத்துக்கு அலைய வைத்தார். இரண்டு பேரும் போட்டி போட்டு கொண்டு எனக்கு இம்சைகள் கொடுக்கிறார்கள். கருணாநிதிக்கு ஜெயலலிதா எதிரி. ஜெயலலிதாவுக்கு கருணாநிதி எதிரி. இரண்டு பேருக்கும் நான் தான் எதிரி. ஸ்டாலின் என்று ஒருத்தர் இருக்கிறார். அவருக்கு அவரே எதிரி.

இது தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடக்கும் போர். தர்மம் தான் நான். விஜயகாந்த் வந்தான், மக்களுக்காக வாழ்ந்தான் என்று சரித்திரம் பேச வேண்டும். அதற்காக தான் நான் வந்து இருக்கிறேன். இன்னும் பலர் விஜயகாந்த் ஏன் வருகிறார்? எதற்கு வருகிறார்? வந்து விடுவாரா? என்றெல்லாம் நினைக்கிறார்கள். இரண்டு பேர் தான் மாறி, மாறி கொள்ளை அடிக்க வேண்டுமா? புதிய கட்சி ஆட்சிக்கு வரக்கூடாதா? அனுபவசாலிகள் வேண்டுமாம். மக்கள் என்ன நினைக்கிறார்களோ அதை நான் செய்வேன். வெளிப்படையான அரசு தான் எனக்கு தெரியும். முல்லைப்பெரியாறு அணைக்காக நானும் போராடி இருக்கிறேன். தேனியில் உண்ணாவிரதம் இருந்தேன். இந்த தேர்தலில் எங்கள் வேட்பாளர்கள் அத்தனை பேரும் வெற்றி பெறுவார்கள்" என்று பேசினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.