Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 16, 2016

'போட்டிகள் அதிகரிப்பதால் ஆபத்துதான் விளையும்!' - அட விஜயகாந்த் யாரை எச்சரிக்கிறார்?


தேர்தலில் அதிக கட்சிகள் போட்டியிடுவது உங்களுக்கு (திமுக, அதிமுக) ஆதாயம் இல்லை, ஆபத்து என்று சென்னையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் விஜயகாந்த் எச்சரிக்கை விடுத்து பேசினார்.

சென்னையை அடுத்த சோழிங்கநல்லூர், செய்யூர் ஆகிய இடங்களில் தே.மு.தி.க., மக்கள் நலக்கூட்டணி, த.மா.கா. தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், " தமிழகத்தில் தற்போது குடிநீர் பிரச்னை அதிகமாக உள்ளது. ஆட்சியில் உள்ளவர்களோ இல்லை என்று கூறுகிறார்கள். குடிநீர் பிரச்னையால் பல இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபடுகிறார்கள். தடுப்பணை கட்டாதவர்கள் இப்போது தடுப்பணை கட்டுவோம் என்று கூறுகிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு மழைபெய்து நீர் அனைத்தும் வீணாய் போனது. அப்போது தடுப்பணை கட்டி அந்த மழைநீரை சேமித்திருந்தால் பிரச்னை இருந்திருக்காது.

தி.மு.க. மாவட்டம் தோறும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை கொண்டு வருவோம் என்று கூறியிருக்கிறார்கள். இதை எல்லாம் அவர்கள் செய்யவா போகிறார்கள். தி.மு.க., அ.தி.மு.க. 2 பேரும் கூட்டு களவாணிகள், விஞ்ஞான ரீதியில் கொள்ளை அடிக்கிறார்கள். மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை என கொள்ளை பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. நான் உழைத்து சம்பாதித்த பணத்தில்தான் கட்சியை நடத்துகிறேன். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வரும். படித்த, படிக்காத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

அ.தி.மு.க.விடம் முரட்டு பணம் இருக்கிறது. என்னிடம் முரட்டு மக்கள் இருக்கிறார்கள். இந்த நாட்டில் விரோதிகளை கூட விட்டுவிடலாம். ஆனால் துரோகிகளுக்கு ஓட்டே போடக்கூடாது. ஆசை வார்த்தைகளை சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள். நீங்கள் 5 முறை ஆண்டுவிட்டீர்கள், 6-வது முறையும் ஆள வேண்டுமா? இத்தனை பேர் தனித்தனியாக நிற்கிறார்களே இது உங்களுக்கு (அ.தி.மு.க., தி.மு.க.) ஆதாயம் இல்லை, உங்களுக்கு அழிவுதான். நீங்கள் எத்தனை கட்சிகளை பிடித்தாலும் நாங்கள் 6 கட்சிகள் ஒன்றுசேர்ந்து இருக்கிறோம்" என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.