Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 8, 2016

விஜயகாந்த் வரவு! சரிந்த பா.ம.க செல்வாக்கு!


2006 தேர்தலில் தி.மு.க கூட்டணியில் பா.ம.க போட்டியிட்டது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு பா.ம.க வெற்றி பெறவில்லை. பா.ம.க.வின் கோட்டைகளிலேயே சரிவு ஏற்பட்டது.

பா.ம.க பெல்ட் எனப்படும் வட மாவட்டங்களில் மிக நம்பிக்கையுடன் போட்டியிட்ட தி.மு.க.வுக்கு பல இடங்களில் தோல்வியே கிடைத்தது. வட மாவட்டங்களில் வெற்றி பெற வேண்டுமானால் பா.ம.க.வுடன் கூட்டணி வைத்தே ஆக வேண்டிய நிலையில் முக்கிய கட்சிகளை வைத்திருந்தது பா.ம.க. அந்த அளவுக்கு கட்டுக்கோப்பாக காப்பாற்றப்பட்டு வந்த பா.ம.க.வின் வாக்கு வங்கி 2006 தேர்தலில் சரிந்தது. விஜயகாந்த்தின் புலிப்பாய்ச்சல்தான் இந்த சரிவுக்கு முக்கிய காரணமாக சொல்லப்பட்டன.

வட மாவட்டங்களான திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய 9 மாவட்டங்கள் மற்றும் மேற்குப் பகுதியில் உள்ள சேலம், நாமக்கல், கிழக்கில் உள்ள பெரம்பலூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பா.ம.க.வுக்கு செல்வாக்கு அதிகம். 2001 தேர்தலில் 27 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ம.க 21 தொகுதிகளில் வென்றது. 2006 தேர்தலில் 31 தொகுதிகளில் போட்டியிட்டு 17 தொகுதிகளில் மட்டுமே வெல்ல முடிந்தது.



வன்னியர்களின் கோட்டை எனப்படும் வட மாவட்டத் தொகுதிகள் பெரும்பாலானவற்றில் விஜயகாந்த் புகுந்து வாக்குகளை அள்ளினார். விருத்தாச்சலத்தில் வெற்றிக் கொடியை ஏற்றிய விஜயகாந்த் கட்சி, வட மாவட்டத்தின் பெரும்பாலான தொகுதிகளில் நல்ல வாக்குகளை பெற்று, பா.ம.க.வின் ஓட்டுக்களைப் பிரித்தது. வென்ற 17 தொகுதிகளில் சில தொகுதிகளைத் தவிர பெரும்பாலான தொகுதிகளில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் பா.ம.க ஜெயித்தது.

2001 தமிழக சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 27 இடங்கள் ஒதுக்கப்பட்டது. அதில் 20 இடங்களை பா.ம.க. கைப்பற்றியது. 2006 சட்டசபைத் தேர்தலில் 31 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில் வென்றது. மதுரை அல்லது குடியாத்தம் தொகுதியில்தான் விஜயகாந்த் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வன்னியர் கோட்டையான விருத்தாசலத்தில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார் விஜயகாந்த். வேறு எந்த பெரிய கட்சியும் பா.ம.க.வை சொந்த மண்ணில் எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற முடியுமா என்ற நிலையில்தான் இந்த அதிரடியை நிகழ்த்தி காட்டினார் விஜயகாந்த். சுமார் 14 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் பா.ம.க. வேட்பாளரை வெற்றி கொண்டார் விஜயகாந்த். தி.மு.க., காங்கிரஸ், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவோடு களமிறங்கிய பா.ம.க.வுக்கு, விஜயகாந்தால் வடமாவட்டங்களில் பலத்த அடி கிடைத்தது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.