மக்கள் நலக் கூட்டணியின் சார்பில் பல்லாவரத்தில் போட்டியிடுகிறார் தமிழர் முன்னேற்றப்படை கட்சியின் தலைவர் வீரலட்சுமி. அவர் குறித்து வெளியாகும் வதந்திகளால் ரொம்பவே கொந்தளிப்பில் இருக்கிறார்.
பல்லாவரம் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் சி.ஆர்.சரஸ்வதியும், தி.மு.க சார்பில் இ.கருணாநிதியும் போட்டியிடுகின்றனர். இந்தத் தொகுதியில் மக்கள் நலக் கூட்டணியின் வேட்பாளராக வீரலட்சுமி அறிவிக்கப்பட்டது முதல், தொகுதியே அதகளப்படுகிறது. அதிலும், நேற்று வெளியான ஒரு தகவலால் கூடுதல் டென்ஷனில் இருக்கிறார் அவர்.
' வீரலட்சுமிக்கு சீட் கொடுக்கப்பட்டதில், காஞ்சி மாவட்ட தே.மு.தி.க செயலாளர் அனகை முருகேசனுக்கு விருப்பமில்லை. அவர் நேரடியாக வீரலட்சுமியிடம், 'தொகுதியை விட்டுப் போய்விடுமாறு' மிரட்டினார். இதனால் பயந்து போனவர், பல்லாவரத்தைவிட்டு வேறு தொகுதிக்கு மாறலாமா?'என யோசித்து வருகிறார்' என்ற தகவல் பரவியது.
தே.மு.தி.க மா.செ மிரட்டியதாகச் சொல்லப்பட்ட தகவல், தொகுதி முழுக்க பரவ கொந்தளித்துப் போனார் வீரலட்சுமி.
இதுபற்றி நம்மிடம் பேசிய வீரலட்சுமி, " காலையில் இருந்தே செம டென்ஷன்ல இருக்கேன். பிரசாரத்திற்குக் கிளம்பற நேரத்தில இப்படிப் பண்ணலாமா? நேத்துதான் அனகை முருகேசன் அண்ணனை நேரில் பார்த்து சால்வை போர்த்தினேன். அவர் ரொம்ப பாசமா, 'என்னோட மாவட்டத்தில் என் சகோதரி போட்டியிடறதுல ரொம்ப சந்தோஷமா இருக்கேன். மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் உன்னை ஜெயிக்க வைப்போம்' னு ஆதரவா பேசினார். இதுதவிர, முக்கிய நிர்வாகிகள் ஐம்பது பேருக்கு சால்வை போட்டு ஆதரவையும் கேட்டு வந்தேன். அப்படி இருக்கும்போது தப்புத் தப்பா புரளி கிளப்பி விடறாங்க.
யார் இப்படி வதந்தி பரப்புனாங்களோ, அவங்க மேல வழக்குப் போடப் போறேன். நான் ஜெயிச்சிருவேன்னு பயந்துபோய், தி.மு.க ஆட்கள்தான் இப்படித் தவறான தகவல்களை பரப்புறாங்க. தி.மு.ககாரங்க இப்படி ட்விஸ்ட்டிங் வேலை பண்றது சரியாண்ணே...சி.எம் வேட்பாளரா கேப்டனை அறிவிச்சிருக்காங்க. அதனால் நான் ஜெயிக்கனும்கிறதுல தே.மு.தி.க நிர்வாகிகள் உறுதியாக இருக்காங்க.
நான் இன்னும் பிரசாரத்திலேயே இறங்கலை. நிர்வாகிகளை சந்திச்சிட்டு வர்றதைப் பார்த்து இவங்களால பொறுத்துக் முடியலை. மக்கள் மத்தியில் என் பெயரைக் கெடுக்கணும்னு முயற்சி பண்றாங்க. அவங்க முயற்சி எதுவும் பலிக்காதுண்ணே...நான் பிரசாரத்தில் இறங்கினதுக்குப் பிறகு தி.மு.க, அ.தி.மு.கன்னு ரெண்டு கட்சிக்காரங்களும் ஓடப் போறாங்க. அது மட்டும் கன்ஃபார்ம். நான் எங்க போனாலும் உளவு பார்க்கறதுக்கு தி.மு.கவுல ஆட்களை போட்டிருக்காங்க. நான் எங்க போறேன், என்ன பண்றேன்னு கண்காணிச்சு புரளி கிளப்பறாங்க. என்னைப் பார்த்து பயந்து போய்ட்டாங்க. நான் பிரசாரத்தில இறங்கினதுக்குப் பிறகு பாருங்க. இவங்க யாருமே எனக்குப் போட்டியா இருக்கப் போறதில்லை. பொறுத்திருந்து பாருங்கண்ணே...!" எனக் கொந்தளித்தார் வீரலட்சுமி.
இன்னும் தொடங்கவேயில்லை. அதுக்குள்ளயேவா?

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.