Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 9, 2016

உளுந்தங்கஞ்சி


உளுந்தங்கஞ்சி, உளுந்தங்களி சாப்பிட்டால் சுருங்காத தோலும், மங்காத கண்களும்,பெருக்காத இடுப்பும்,தேயாத எலும்புகளும் கிடைக்கும். முதுகு வலி,இடுப்புவலி இரண்டுமே இருக்காது. பெண்களுக்கு கர்பப்பை மிகவும் வலுப்பெறும்.

தேவையான பொருட்கள் :

உளுந்தம்பருப்பு – ஒரு டம்ளர்( கருப்பு உளுந்து நல்லது)

பச்சரிசி – அரை டம்ளர்

வெந்தயம் – ஒரு தேக்கரண்டி

பூண்டு – 20 பல்

வெல்லம் அல்லது கருப்பட்டி – இனிப்புக்கு ஏற்றது போல்

தேங்காய் – அரை மூடி

செய்முறை:

* உளுந்தம்பருப்பு, பச்சரிசி, வெந்தயம், உரித்த பூண்டு அனைத்தையும் போட்டு ஆறு டம்ளர் (பருப்பு அளந்த டம்ளரில்) தண்ணீர் ஊற்றி குக்கரில் வைத்து 8 விசில் வரும் வரை விட வேண்டும்.



* இது தயாராவதற்குள் வெல்லம் அல்லது கருப்பட்டியை சிறிதளவு தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சி வைத்துக் கொள்ளவேண்டும்.

* தேங்காய் அரைத்து பாலும் எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும்.

* எட்டு விசில் வந்தவுடன் இறக்கி சூடாக இருக்கும் போதே நன்கு மசித்துவிட்டு வெல்லப்பாகு, தேங்காய்ப் பால் இரண்டையும் ஊற்றி சூடாக சாப்பிடவும். தேங்காய் துருவியும் போடலாம்.

* சத்தான உளுந்தங்கஞ்சி ரெடி.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.