அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தல் முடிவுகளில் முன்னணி வேட்பாளர்களான டொனால்ட் டிரம்ப் மற்றும் ஹிலாரி கிளிண்டன் ஆகிய இருவரும் அதிர்ச்சி தோல்வி அடைந்தனர். அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பரில் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பாளர் தேர்வில், ஜனநாயக மற்றும் குடியரசு கட்சிகளில் பலரும் போட்டியிடுகின்றனர். ஜனநாயக கட்சியில் ஹிலாரி கிளிண்டன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். குடியரசு கட்சியில் டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் இருந்தாலும், அடுத்தபடியாக உள்ள டெட் குரூஸ் அவரை வேகமாக நெருங்கி வருகிறார். இதனால், டிரம்புக்கு நெருக்கடி ஏற்படும் என கருதப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று வெளியான விஸ்கான்சின் மாகாண தேர்தல் முடிவுகளில் டொனால்ட் டிரம்பை பின்னுக்குத் தள்ளி டெட் குரூஸ் வெற்றி பெற்றார். குருஸுக்கு 48% வாக்குகளும், டிரம்புக்கு 34% வாக்கும் கிடைத்தது. அதுபோல, 43% வாக்குகள் பெற்று அதிர்ச்சி தோல்வியை சந்தித்தார் ஹிலாரி. அவரை பின்பற்றி வரும் பெர்னி சாண்டர்ஸ் 56% வாக்குகளுடன் வெற்றி பெற்றார். கடந்த சில வாரங்களில் ஹிலாரியை எதிர்த்து அவருக்கு கிடைத்துள்ள 6வது வெற்றியாகும். அடுத்து நடைபெறும் தேர்தல்களில், இந்த நிலை நீடித்தால் அதிபர் வேட்பாளர் ஆவது உறுதி எனும் நம்பிக்கையில் சாண்டர்ஸ் உள்ளார்.
டிரம்ப்புக்கு தற்போது 740 பிரதிநிதிகள் வாக்கு உள்ளது. அவரை வேகமாக நெருங்கி வரும் குருஸுக்கு 514 பிரதிநிதிகள் வாக்கு உள்ளது. இந்த மாத இறுதிக்குள் முதல்கட்ட தேர்தல் முடிவுக்கு வந்துவிடும். எனவே, குரூஸ் முன்னேறி வருவதைத் தொடர்ந்து, அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு தேவைப்படும் 1,237 உறுப்பினர் வாக்குகள் டிரம்ப்புக்கு கிடைக்குமா என்பது கேள்விக்குறி ஆகியுள்ளது. ஆனால், அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படுவது உறுதி என டிரம்ப் ஆணித்தரமாக நம்புகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.